பல நூற்றாண்டுகளுக்கு முன்னது என்பதும், நற்றிணை, அகம், புறம் தொகைப் பாட்டுக்களில் சில கி.மு.5-6ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தியவையென்பதும் ஒருவாறு முன்னமே சொன்னதாகும் தொல்காப்பியர் தம் நூலைத் தற்கால நூலொடு வழக்கையும் தழுவி, எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி, முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தார் என்றறிகிறோம் அம் மூன்று பகுதிகளின் ஆன்ற விதிகளும் பண்டைத் தொகைப் பாட்டுக்களில் கண்ட பல ஆண்டுகளுக்கு முந்தியதாதல் ஒரு தலையாகும் இம் முரண்பாடுகள் இந்நூலின் தொன்மைக்கு நற்சான்றாவதுடையன, அவை இந்நூலின் நன்மரபுகளை விளக்குவதாலும் அவை ஆராயத்தக்கனவாம்
1 முதலில் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில்
(1) சகரக்கிளவியும் அவற்றோரற்றே, அ,ஐ,ஒள
எனும் மூன்றலங்கடையே (சூத் 27)
(2) ஆ-எ-ஒஎனும் மூவுயிர் ஞகாரத்துரிய (31)
(3) ‘அ’ போடல்லது யகரம் முதலாது (32)
இவை ஒவ்வொன்றுக்கும் மாறாகச் சங்கப் பாட்டுக்களின் பலமொழிகள் பல்காலும் பயிலுகின்றன
2 சமழ்தல்-சவட்டு-சாந்தி-சட்டி-சண்பு-சதுக்கம் என்பல சொற்களில் விலக்கப்பட்ட சகரமும், சைவம். செளரம்-எனச் சைகார-செளகாரங்களும் மொழி முதலாகப் பயிலுகின்றன
3 அதுவே போல, ஞமலி - ஞரலல்-ஞமிறு,ளுேயம் என விலக்கப்பட்ட உயிர் ஏறிய ஞகர உயிர் மெய்களும்
4 யவனர், யூகம், யூபம் என விலக்கப்பட்ட உயிர் ஏறிய யகர உயிர்மெய் முதலிலுடைய சொற்களும் சங்கப் பாட்டுக்களில் பயிலுகின்றன