பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

செந்தமிழ் பெட்டகம்

வரை போவதால, தொல்காப்பியர் நூல் 3,000 ஆண்டுகளுக்கு முன்னதாதல் தேற்றமாகும்

தொல்காப்பியருக்கு முன் தமிழில் நுண்புலமை இலக்கண நூல்கள் இருந்த செய்தி இவர் நூலில் பல இடங்களில் இவர் கூற்றுக்களுக்கு ஆதரவாக ஆங்காங்கே என்ப’, ‘என்மனார் புலவர்’, ‘மொழிப’ என்று சுட்டுவதால் விளங்கும் இவருக்கு முன் பல நூல்கள் இருந்தது மட்டுமல்ல; சிறந்த பகுதிகளுக்கு விரிந்த தனிச்சிறப்பு நூல்களும் வழங்கின என்பதும் சுட்டப்படுகிறது ‘யாப்பென மொழிப, யாப்பறி புலவர், ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’ 'என்பர், தொடை உணர்வோ’ என்ற குறிப்புக்கள் இடையிடையே சுட்டுதல் சிந்தித்தற்குரியனவாம்

எனவே, தொல்காப்பியருக்கு முன் ஆதார நூல்கள் பல என்பதும், அவற்றைப் படித்துத் திரட்டிச் சுருக்கி உருவாக்கியதே தொல்காப்பியர் நூலென்பதும், அதற்கு முதுல் நூல் அழிந்த ‘அகத்தியம்’ ஒன்றே என்பது பின் புராண காலத்திற் புகுந்த கதை என்பதும், நேரிய ஆராய்ச்சி யாளர் நடுநிலை முடிபாம்

இலக்கிய வரலாறுகளும் நூற்சான்றுகளும் இவ்வுண்மையை வலியுறுத்தக் காண்பதுமட்டுமன்று, கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய சங்க இலக்கியங்களில் அகத்தியர் பெயர் கூறப்பெறாமையும் இவர் கதையின் புதுமையைச் சுட்டப் போதிய சான்றாம் ஆரிய நூல் வரலாற்றால் மூவர் அகத்தியர் கூறப்படுகின்றனர்

முதலுாழியில் ஆதிவேத காலத்துக்கு முன் இமயத்தருகே திரிந்த முனிவர் தலைவர், உலோப முத்திரையின் கணவர் முதல் அகத்தியர் பிறகு 2 ஆம் ஊழியில், வான்மீகர் இராமாயண ஆரணிய காண்டத்தில், அயோத்திக்குத் தெற்கே பஞ்சவடிப் பக்கத்தில் தவம் பண்ணிக் கொண்டு தங்கியவராகச் சொல்லுகிற அகத்தியர் 2 ஆம் அகத்தியர் இருவரும் ஆரியர் முதல்வர் தென்தமிழ்