பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

159

நாடிருந்த செய்தி கேட்டு மறியாதவர் இராமர்காலப் பஞ்சவடி அகத்தியரும் தமிழறிந்தவராக வான்மீகர் சுட்டவில்லை அவரின் வேறாய் கிட்கிந்தா காண்டத்தில் தெற்கே மலையத்தின் தென்கோடியில் வசித்தவராக ஒர் அகத்தியர் சுட்டப்படு கிறார். அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கலாம் ஆனால் தமிழ் இலக்கண முதல் நூல் இயற்றியவரென்றவரை வட வான்மீகரும் தமிழ் கம்பரும் சொல்லாததோடு, கம்பர் அவரை, என்று முள தென் தமிழ் இயம்பி இசை கொண்டார்’ எனவும், தம் நூலால் தமிழுக்குச் சிறப்புத் தருதற்கு மாறாகத் தமிழ்ப் பயிற்சியால்தான் பெருமை யடைந்தாரெனவும் தெளிவாக விளக்குகின்றார் இது, தொல்காப்பியருக்கு அகத்தி யரைத் தமிழறிவித்த முதுனூலாசிரியராக்கி, அகத்தியர் முதனூலை வழக்கிழக்கவைத்து நன்றி கொன்ற பழியையும், தொல்காப்பியருக்குச் சுமத்தும் பிற்காலக் கதையை முழுதும் பழுதாக்கும் நூற்சான்றாகும் ‘காப்பியர்’ என்பது பழைய தமிழ் நூல்களில் குடிப் பெயராய் வழங்குகிறது சேந்தன் தந்தை காப்பியனார், காப்பி யாற்றுக் காப்பியனார், பல் காப்பியர், தொல் காப்பியர், எனப் பல புலவர் அகபெயரு டையார் உண்டென்பது பண்டை இலக்கியங்களில் கண்ட செய்தி

இப்பெருநூலைத் தம் பெயராலியற்றியவர் அப் பெயருடையரான இவருக்கும் முந்தியவராதலால் தொல்காப்பியர் எனப் பனம்பாரர் விளக்கமாகக் கூறு வதைப் பொய்யாக்க, யாதோர் ஆதாரமுமில்லாத தோடு அகத்தியர் பெயரும் சுட்டாத சங்கத்தொகை நூல்களும் அக்கதையைப் புறக்கணிக்கப் போதியனவாம்

இனி இப்பழம்பெரு நூலின் அருமை பெருமை பற்றிச் சுருக்கமாகபார்ப்போம்

தொன்மையாலும், நிறை நூல் முறை நன்மையாலும் சிறந்தது தொல்காப்பியர் நூல் தமிழில் இறவாமல் 3000 ஆண்டுகளுக்குமேல் நின்று நிலவும்