பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

189

தீமையினை விளக்குவதே தத்துவ சாத்திரங்களின் பெருமுயற்சி, கடவுட் புலவர்களின் பேரவா இந்த ஆற்றுப்படையைப் பாடிய நக்கீரரும் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுப் பாடுகின்றார்

ஒளி வடிவான ஞாயிற்றைக் காணும் பொழுதும் முருகன் காட்சி அளிக்கின்றான், வெயிலுக்கும் ஒளிக்கும் எதிர்மறையான மழையிலும் இருளிலும் தொட்டுப் பார்த்து, அதன் உருண்டைவடிவால் கடப்பம் பூவென அறியும் இடத்திலும் அப்பூவில் ஆழ்ந்து ஒளிர்கின்றான் ஆண்டவன் நன்மையின் வடிவம் சூரர மகளிர் தீமையின் வடிவம் பேய் மகள் இவை இரண்டும் முருகனது இருவேறு வழிபாட்டு வடிவமாகத் தோன்றுகின்றன ஆற்றுப் படையில் பெண்ணழகினைப் புனைந்துரைக்கும் வழக்கத்தினைக் கண்டோம்

இங்கும் பெண் அழகு செய்துகொள்ளும் இயற்கையான ஒப்பனையைப் புலவர் பாடுகின்றார் ஆற்றுப் படையில், இருந்தவனது வறுமையும், வந்த வனது செல்வமும் முரண்பட்டுத் தோன்றும் இங்கே உலகின் அடிப்படையான இன்பதுன்ப, நன்மை தீமைகளின் முரண்பாடு தோன்றுவதனைக் காண்போம் நன்மை பெற விரும்புவோனை நோக்கி, “உனக்கு விருப்பம் இருக்குமானால் நீ நினைத்ததை இப்போதே பெறலாம்” என்று உறுதி கூறுகின்றார் புலவர்

மதுரையின் வனப்பையும், சிறந்த கடைத் தெருவின் செல்வத்தினை யும், பகைவரைப் பெண்களென இகழும் கொடிமரத்தால் தோன்றும் வீரத்தினையும், சில அடிகளில் விளக்கி வைத்து, அதற்கு மேற்கில் உள்ளது முருகன்வாழும் பரங்குன்றம் என்கின்றார் ஆன்மா சேற்றில் அழுந்திப் பின் விடுபட்டு உயர் நிலையை அடைவதனைக் குறிப்பார்போல் வண்டு தாமரையில் சிக்கிப் பின் நெய்தல் ஊதிப் பின் உயரப் பறந்து, புலரி விடிந்ததும் சுனைமலரில் ஒலிக்கின்ற அழகைக்