பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

191

அறிவாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த முனிவர்கள் அடுத்த வருபவர்கள் அழகிற் சிறந்து, காதலில் ஒன்றாகி, இசையில் பண்பட்டு, உயர்ந்த மனத்தோடு விளங்கும் கந்தருவத் தம்பதிகள் திருமாலின் பெருமையை, அவனேறும் கருடன் பதைபதைக்க, ஆட்டிவைக்கும் பாம்பின் வழியே சுட்டுகின்றார் புலவர் மூவெயில் முறுக்கில் செல்வரும் உமையோடு வருகின்றார் ஆயிரம் கண் படைத்து யானைமேல் வரும் இந்திரன் பெருமையைச் சொற்றொடர்களின் ஒலியாலேயே புலவர் விளக்குகின்றார் வான்மீன் பூத்தாற் போன்றது இவர்களது நடை, அதனோடு தீயும் பற்றிக் கொண்டற் போன்றது இவர்களுடைய ஆற்றல் தீப்பறக்க இடிஇடித்தாற் போன்றது இவர் குரல் மடந்தையோடு விற்றிருக்கும் முருகனை இவர்கள் வேண்டிக் கொள்ளுகின்றர்கள் அந்நாளைய புராணங்களை யெல்லாம் இக்காட்சி ஒற்றுமைப் படுத்துகின்றது

இனித் தமிழ் நாட்டில் வழங்கிய பலவகை வழிபாடுகளையும் முருகன் வழியே ஒற்றுமை கொண்டு பாடப்புகுகின்றார் புலவர் திருவேரகத்தில் அந்தணர்கள் 48 ஆண்டுக்குப் பின் மணந்து, ஈரத்துணியோடும் பூனூலோடும் மந்திரம் கூறிப் பூவைத் துரவி வழிபடுகின்றனர் உலகெங்கும் ஆண்டவன் கோயில் கொண்டு இருப்பதனைப் பொதுமையறம் ஒங்கக் கூறுவார்போல்குன்றுகள் எல்லாம் அவன் கோயில்களே என்று குன்றுதோறாடலைப் புகழ்கின்றார் புலவர்.

வேலன் கடவுள்களை கள்ளுண்டு பெண்களோடு கூடிப் பாழாகாது முருகனை எண்ணிக் குரவைக் கூத்தாடுகையில் முருகப் பெருமானே அங்கு வந்து அடைவதாக நக்கீரனாருக்குத் தோன்றுகிறது கண்ணன் கோபிகைகளோடு ஆடியகுரவைக் கூத்தாம் ராதாலிலை ஆண்டவன் ஒருவனாய்ப் பல ஆன்மாக்களிடத்தும் ஒருங்கு மகிழ்ந்து குலாவி நிற்கும் சிறந்த உண்மையைக்