பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

செந்தமிழ் பெட்டகம்

குறிப்பதுபோல இங்குக் கூறப்பெறுகின்ற குரவைக் கூத்தும் குறிக்குமென்று கொள்ளுதல் வேண்டும்

எஞ்சி நிற்கும் பலவகையான வழிபாடுகளை அடுத்தபகுதியில் புலவர் சுருக்கிக் கூறுகின்றார் வழிபாடு என்று கருதக்கூடாத ஒரிடம் இந்நாளைய மக்களுக்குத் தோன்றுவதுபோல நக்கீரருக்கும் தோன்றியுள்ளது. இது வரையில் கூறிய வழிபாடுகள் எல்லாம் முருகனுக்கு ஏற்றவையானாற்போல் இதுவும் அவருக்கு உகந்ததாகவே புலவர் சுட்டுகின்றார் அச்சத்தை ஊட்டும் வெறியாட்டுச் செந்நூல், வெண்பொறி, கிடாய்பலி, இரத்த அரிசி, வெறியாட்டு வாத்தியங்கள், குறமகள்மேல் ஆவேசம் இத்தனையும் புலவர் கூறுகின்றார் இங்கும் இத்தனை கொடுமைகளுக்கு இடையே, வழிபடுவோர் தம்மை மறந்து தமக்கும் அப்பாற்பட்டதொரு பேராற்றலுக்கு முடிவணங்கி, நைந்துருகியாடும் பொழும் அச்சத்தைத் தரும் வாத்தியமெல்லாம் கடவுளது இன்னிசையாக நக்கீரருக்குக் கேட்கின்றன. பகைவர் அஞ்சலாம், அன்பர் அஞ்சுவதேன்? முருகன் அங்குத் தோன்றுகின்றான் குறத்தி அங்கே முருகாற்றுப் படுத்துகின்றாள் நம்ப முடியாத இடத்திலேயும் கடவுள் வருவதனை நம்பும்படி செய்து, “ முருகாற்றுப் படுத்த வியன்நகர்” என்று புகழும் சிறப்பை நோக்கி, அந்தத் தொடரே இந்த நூலுக்குப் பெயர் ஆயிற்று என்று சொல்வோரும் உண்டு “எங்கேனும் ஆண்டவனை வழி பட்டால் அவன் தோன்றுவான் அவனைப் புகழ்ந்து, அவன் அடியில் விழுந்தால் தனது இளமை வடிவைக் காட்டி உலகில், “நீயே உனக்கு உவமை யாகும்படி சிறந்த நிலையைத் தருவான் “ என்று புலவர் முடிக்கின்றார்

முடிவிலே பழமுதிர்சோலையும் முருகனது இடம் என்று கூறுவார் அங்கு வீழும் அருவி, பழமும் தேனும் பொன்னும் கொண்டு வந்தாலும் விலங்குகள் அஞ்சி ஒடுவதனைக் காட்டிப் புலவர் புகழ்ந்து, ஆண்டவன் அருள் வெள்ளம் உலகில் பெருக்கெடுத்து ஓடினாலும்,