பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

193

பொன்னும் மணியும் பூவும் உணவுமாய்ப் பொங்கினாலும், அதனைக் காணக் கண்ணின்றி மக்கள் விலங்குகள் போல் வாரிந்து, அஞ்சியோடித் தங்களுடைய பழைய துன்ப இருட்டுக்குள்ளேயே நுழைந்து வாடுகின்றார்கள் என்பதனைச் சுட்டுவது போன்றுள்ளது இந்த அருவி வருணனை

அகப்பொருளைப்பற்றிப் பாட்டுக்களை ஆராய்வதற்கு முன் புறப்பொருளைப் பற்றியதாய்ப் புரவலன் பெயரை வெளிப்படக் கூறும் ஆறாம் பாட்டாம் மதுரைக் காஞ்சியினை ஆராய்வோம் இது 782 அடிகளைக் கொண்ட மிக நீண்ட பாட்டு , இஃது ஆசிரியப்பா, வஞ்சியடிகள் வருவதால் வஞ்சிப் பாட்டு என்றும் கூறுவர் இதனை இயற்றியவர் மதுரைக் காஞ்சிப் புலவர் என்று புகழப் பெறும் மாங்குடி வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இதனுடைய தலைவன் அவன் பாடிய புறப்பாட்டு, “ யான்பகைவரை வெல்லேனாயின் மாங்குடி மருதானர் தலையாலங் கானத்துப் பகைவரை மருதனாரைத் தலைவராகக் கொண்ட புலவர் என்னுடைய நாட்டைப் பாடாது ஒழிக” என்று வஞ்சினம் கூறுவதால், இப்புலவரை எவ்வளவு உயர்வாகக் கருதியிருந்தான் அவன் என்பது தெளிவா கிறது பின் வந்தோர்கள் காஞ்சி என்பதனைப் படை யெடுப்பைத் தடுத்துப் போராடல் எனப் பொருள் கொண்டாலும், இப்புலவர் தொல்காப்பியர் கூறும் பொருளையொட்டி நிலையாமை என்றே பொருள் கொண்டு, நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை மதுரையில் நிகழும் ஒண விழாவன்று அவ்வார வாரத்தினிடை அறிவுறுத்தி நல்வழிப்படுத்துகின்றார் உலகம் புகழவாழ்ந்த நெடுஞ்செழியனது முன்னோது செல்ல வாழ்வையும், திக்குவிசயத்தால் இந்தியா முழுதையும் ஆண்ட ஒப்பிலா உயர்வையும் கூறி, அவர்களுடைய வழி வந்தவனே என்று நெடுஞ்செழியனை விளிக்கின்றார்

கடலில் கப்பல்களில் சென்று பெருமையைப் பாண்டியர்கள் தமதாக்கிக் கொண்டனர் கடற்கரையி-

செ பெ- 13