பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

203

வீட்டினெதிர் விலங்குகள் மேயும் அறம் செய்வோர் அருள் வாழ்க்கை வாழ்ந்து, நடுநிலையில் நீங்காது மெய்யே பேசி, விலையும் ஓரளவுக்குமேல் கொள்ளாது, கொடுக்கும் பண்டங்களையும் குறையாது தந்து வாணிகம் செய்து அங்கு வாழ்கின்றனர் திருவிழாக் காலத் தில் பல நாட்டினரும் ஓர் ஊரில் சேர்வதுபோல இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலும், பல நாட்டு மக்களும் ஒருங்கு சேர்கின்றனர் இவ்வாறு காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடுகின்றார் உருத்திரங்கண்ணனார் “நெஞ்கமே இத்தகைய சிறந்த பட்டினத்தை நான் பெறு வதாயிருந்தாலும் தலைவியை விட்டுவாரேன்” என்று கூறுகிறான் தலைவன் பிரிவு எண்ணம் தோன்றுவது தான் பாலை தலைவி பிரிந்த பொழுது துறக்கமே போன்ற பட்டினமும் இன்பமாகத் தோன்றாது துன்பமாகத் தோன்றும் என்கிற பிரிவின் கொடுமை இவ்வாறு அழகாகக் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பின் வழியே பாடப்படுகிறது

பாலைக்குப் புறமாவது வாகை அல்லது வெற்றி அந்த வெற்றி, பாட்டுடைத்தினைத் தலைவனது வெற்றியாகப் பின்னே காண்கிறோம் அவ்வெற்றிவெறுங் கொலையாக முடியாது பழம்பெருந் தமிழ் நாகரிகத்தின் நிலையமாம் காவிரிப்பூம் பட்டினத்தினைக் காத்து நிற்கும் சிறப்பாக முடிவானை முந்துற முந்தப் புலவர் காட்டுகிறார் அப்பெருநகரினையும் புறக்கணிக்கும் வீரவுள்ளம் தலைவனது காதலுள்ளமாகச் செழித்தோங்கி வெற்றி பெற்றொளிர்கிறது இனி, திருமாவளவனது புகழைப் பாடுகின்றார் புலவர் புலிக்குட்டி அடைபட்டு வாழ்ந்தாற்போலப் பகைவரிடையே சிறையுண்டு வாழ்ந்தவன் அந்தப் புலி, யானையைக் குத்திக் கொன்று வெளிவருதல் போலச் சிறையினின்றும் தப்பி அரச உரிமையைப் பெறுகின்றான் வளவன் அதோடும் அமையானாய்ப் பகைவர்மேல் பாய்கின்றான் பகைவர்களது நீர்வள மிக்க பொய்கைகள் எல்லாம்