பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

207

நாளைய பெண்கள் விரும்பிய தழையைப் பற்றிக் கூறுவாளாய்ப் பூக்களை எல்லாம் நன்கு புனைந்து ரைத்துச் செல்லின்பம் தோன்றப் பாடிச் செவிலியின் மனத்தை ஒயவைத்துத் தன் வழிப்படுத்துகின்றாள் தோழி

இந்த விளையாட்டுக்குப் பின்னே இவர்கள் உயிர்க்கே உலைவைத்தாற்போல யானை வருவதனைக் கூறப்புகுகின்றவள், அதற்கு முன்பாகத் தலைவன் அவர்கள் எதிரே வந்த ஆண்மையை - எல்லாம் அழகையெல்லா - பாடுகின்றாள் இந்த இடையூற்றின் இடையே யானைக்கு அஞ்சித் தலைவி தலைவனைத் தழுவிக் கொள்வதனையும் கூறிவிடுகின்றாள் அவ்வாறு தழுவியதனைக் காதலெனக் கொண்டு தலைவன் அவளைக் காதலிப்பதனையும் விரித்துரைக்கின்றாள் இங்கே யார் மேல் குற்றம் கூறக்கூடும்?

ஆனால் ஓர் ஐயம் செவிலியின் மனத்தின் எழலாம் “தலைவன் தலைவியின் குடிக்கு ஏற்றவனா?” என்றெழும் அந்த ஐயத்தையும் நீக்குகின்றாள் தோழி தம்மினும் சிறந்தவன் என்று நேரே கூறினால், செவிலி ஒப்புக் கொள்வாளா? மலையின் முடியிலே மலர்ந்த பூக்கள் அங்கே விளையாடும் வரையர மகளிரால் கீழே விழுந்து வெறியாடும் களம்போல விளங்குகின்ற நாட்டின் தலைவன் என்று கூறுமுகத்தால் உயர்குடியிலிருந்து வந்து, தெய்வத்தின் முயற்சியால் தலைவியோடு கூடி, அவள் அழகு செய்வதனைக் சுட்டுகின்றாள் தோழி

“மிளகுநிறைந்த பாறை, அதனிடையே ஒரு சுனை, மாம்பழமும் விழுந்ததால் தெளிந்த சாறாய்க் கிடக்கின்ற சுனை தேனும் பாய்கிறது; மயில் அதனைக் குடித்துக் தளர்கிறது” என்று தோழி அவன் நாட்டைப் புகழ்கின்றாள். இதன் கருத்து என்ன? “அந்தப் பாறையே தலைவன் வாழும் ஊர்; அந்தச் சுனையே அவன் பிறந்த குடி; மாவும் பலாவும் அவன் தாய் தந்தையர்; அப்பழங்களிற் பிறந்த