பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

செந்தமிழ் பெட்டகம்


குணம் வளருகிற பாத்தியே குடும்பம் ஒழுக்கம், வாய்மை, நாண், நகை, ஈகை, இன்சொல், இகழாமை முதலியன அங்கு வளரும் பயிர்கள் அப்படி வாழ்ந்து உயர்ந்து குணம் பெற்றோர் மானமே உயிரினும் பெரி தாகக்கொண்டு மானங்கெடவரின் உயிரை விடுவதன்றி ஆபத்தர்மம் என உயிரைக் காப்பாற்ற முயலாமல், உயிரைவிட்டேனும் அறத்தைக் காப்பதே வள்ளுவர் கண்டவழி இத்தகைய குறிக்கோள் வாழ்க்கை யில் சிறந்து வாழ்வதே பெருமை இவ்வாறன்றிப் பிறப்பின் உயர்வு தாழ்வாலோ, செல்வத்தின் சிறப்பாலோ, அதி காரத்தின் ஆரவாரத்தாலோ, பிறர் அருளாலோ பெருமை வராது; தன்னில் தானே வளரும் அருமையு டையது அது இங்கே எல்லா நற்குணங்களும் நிறைந் திருப்பதனையே சமுதாயம் நாடும் சால்பு என்பது அத்தகைய குணங்களின் நிறைவேயாம்

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு." இவ்வாறு சிறந்த குணப் பெருங்கடல்களைக் குடிமக்களாகக் கொள்வதற்கென்று. நாடு தோன்றுகிறது இவ்வாறு சமுதாயம், அரசியல் என்ப வற்றின் பெருமை எல்லாம் இத்தகைய குடி மக்களை விளைவிப்பதே எனக் கொள்ளும் அரசியலமைப்பு வள்ளுவர் கண்ட புதுமை எனலாம் பிறரும் பெருமக்கள் பற்றிக் கனவு கண்டனரேனும் அவர்களைச் சமுதாயத் தில் அரசியலின் பேரொளியாகக் கண்டவர் வள்ளுவரே எனலாம் வள்ளுவர் கூறுவது முடியரசே ஆயினும் இவ்வாறு குடிமக்களை முடிந்த பயனாகக் கூறுவதால் குடியரசுக் கொள்கையில் தம் அரசியலை முடிக்கின்றார் எனலாம் இவர் பின்வந்த கம்பன் அரசர்களை உடம்பாக்கிக் குடி மக்களை உயிராக்குவது வியப்பன்று

படையையே முதலில் கூறுகின்றார் வள்ளுவர் புறப்பகையோ, அகப்பகையோ நாட்டைச் சிதைக்கும் போது படையே உறுதுணையாம் சட்டத்தை எதிர்ப் பாரை முடிவில் அடிபணியச்செய்வதும் படையே ஆம்-