எல்லையில் நின்று துய்மையைக் காத்துள்ளார் துறவியராகிய ஆசிரியர் இல்லறத்தின் சிறப்பையும் கற்பின் பெருமையையும் போற்றிக் கூறும் இடங்களில், அரசியலிலும் சமயத்துறையிலும் அவர் மேற்கொண்ட நடுநிலைமையும் பொதுமையுமே விளங்கக் காண்கின்றோம்
“இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்”
(15 அடைக்கலக்காதை, 12-4) என்று கதையில் வரும் கவுந்தியடிகள் என்னும் துறவியார் வாயிலாக இளங்கோ வடிகள் பத்தினி வழிபாட்டைப் போற்றியுரைத்துள்ளார்
என்று திருவள்ளுவர் போற்றிய பெருமையைக் கண்ணகியின் வாழ்வில் கண்டார் இளங்கோவடிகள் அதனாலே தான் “பத்தினி கடவுளைப் பரசல் வேண்டும்”(25 காட்சிக்காதை 114) என்று சேரமாதேவி வாயிலாகக் கூறியுள்ளார்
(12 வேட்டுவரி, 47-50) என்று தெய்வம் போற்றி உரைப்பதாகவும் குறித்துள்ளார் காவியத்தலைவியின் கற்பின் சிறப்பில் அவருடைய நெஞ்சம் ஈடுபட்டிருந்தது என்பதும், வழிபாட்டுணர்ச்சியோடு அவர் இதனை இயற்றியுள்ளார் என்பதும் இவற்றால் தெளிவாகின்றன