பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

253


நந்தகோன் என்பவன் அரசாங்கப் பசுநிரைக் காவலர் தலைவன் அப்பசு நிரையை மலை வேடர்கள் மடக்கிச் சென்றார்கள் வீரர் பலர் சென்று வேடருடன் பொருது, பசுமந்தையை மீட்கலாற்றாது, புறங்காட்டித் திரும்பினர் அதனையறிந்த நந்கோன், அப்பசு மந்தையை மீட்பவனுக்குத் தன் மகள் கோவிந்தை என்பாளை மணமுடிப்பதாகப் பறையறைவித்தான் சீவகன் தோழருடன் சென்று வேடர்கள் விரட்டிப் பசுக்களை மீட்டு வந்து, கோவிந்தையை மணக்கத் தன் குலம் சம்மதியாதெனக் கருதி, அவளைத் தன் தோழன் பதுமுகனுக்கு மணஞ் செய்வித்தான் இச் செயல் சீவகன் அடைந்த கன்னி வெற்றியாய்த் திகழ்ந்தது

கலுழவேகன் என்பான், வெள்ளிமலையில் வாழ்ந்த வித்தியாதரன் அவன் மகள் காந்தருவதத்தை என்னும் கட்டழகி, யாழிசையிற் சிறப்புற்றவள் சோதிடர் அவள் இராசமாபுரத்து அரசிளங்குமரனை மணப்பாள் எனச் சாதகங் கணித்தனர்

இராசமாபுரத்து வணிகன் சீதத்தன் என்பான் ஒரு தீவையடைந்து, வாணிகஞ் செய்து, பெரும்பொருளுடன் கப்பலேறித் தன்னாட்டிற்கு வரத்திரும்பினான் கலுழவேகன் அதனை அறிந்து, அவனைத் தன்னிடம் கொணருமாறு தரன் என்னும் வித்தியாதரனை அனுப்பினன் தரன் தனது மாயவித்தையின் ஆற்றலால் அக் கப்பல் முழுகியதுபோல் சீதத்தனுக்குத் தோற்ற வித்து, அவனைக் கரைக்குக் கொணர்ந்து, கழலுவேகனிடம் அழைத்துச் சென்றனன் கலுழவேகன் சீதத்தனை உபசரித்துக் காந்தருவ தத்தையின் சோதிடப் பயனைக் கூறி, “இசையில் இவளை வெல்வானுக்கு இவளை மணம் புரிவி” எனப் பணித்து, வீணாபதி என்னும் தோழியுடன் தன் மகளை அவனிடம் அடைக்கலம் செய்தான்

சீதத்தன் தரன் உதவியால் அம்மகளிருடன் விமான மூர்ந்து வந்து, நீரில் முழுகிவிட்டதாகத் தான் கருதிய