பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

273

லும் இவர் சைவ சமயத்தினர் என்பது தெளிவாக விளங்குகின்றது

       “தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
       தானே யாகிய தன்மை யாளன்”

என உரைப்பாயிரத்துப் பாராட்டப்படுதலுங் காண்க

சைவசமயத்தை சார்ந்த இவர், சமண நூலாகிய சீவக சிந்தாமணிக்கு உரையெழுதியிருப்பதும், அந்நூாலில் வரும் அச்சமய மரபுகளை அம்மதத்தவர் போலத் தெளிந்து விளக்கியிருத்தலும் இவருடைய சமரச மனப் பான்மையை விளக்கும் கண்ணன், எழுத்துக்களில் அகர மாகின்றேன். யானே என்று கூறியவாற்றானும் எனப் பகவத்கீதையின் கருத்தைச் (எழுத்-46) சிறப்பாக எடுத்து விளக்கியிருப்பதும்

திருமுருகாற்றுப்படையுரையில் (106-அடி) பரிமேலழகர் கொள்கையை மறுத்து, ‘வசிந்து என்பதற்குப் பொருள் கூறியிருத்தலால் இவர், பதின்மூன்றாம் நுாற்றாண்டில் வாழ்ந்த பரிமேலழகர்க்குப் பிற்பட்டவர் என்பது தெளியலாம் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், ஆளவந்தபிள்ளை ஆசிரியர் அவர் கட்குப் பிற்பட்டவர் என்பதும் தேற்றம்

பொருநராற்றுப்படையில் 141 ஆம் அடிக்குப் பொரு ளெழுதுங்கால், “நாயே பன்றி” என்றுஞ் சூத்திரத்து, ஆயுங்காலை’ என்பதனாற்குருளை யென்பது முடித்தாம்” என்றிவர் எழுதியிருத்தலாலும், கலித்தொகையில் 39, 127 ஆம் செய்யுள்களின் விளக்கவுரையாலும், சீவக சிந்தாமணி 72, 892 ஆம் செய்யுட் களின் விளக்கவுரையாலும் தொல்காப்பியத் திற்கே முதலில் இவர் உரை எழுதினார் என்று தோன்றுகின்றது தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் உரையெழுதினவர் ஆவர் பொருளதிகாரப் பிற்பகுதி யாகிய மெய்ப் பாட்டியல், படைந்து, தம்மைக்கடைத் தேற்றும்படி

செ பெ- 18