பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

287

அருளிச்செய்திருக்கும் அழகு வேறு எந்த நூலிலும் காண்பது அரிது இத்தமிழ் மறைக்கே உரிய தனிச்சிறப்பாகும் இது

தத்துவஞானத்தின் சிகரமாய் விளங்கும் இந்நூலில், அகப்பொருள் சம்பந்தமாய் அமைந்த பாசுரங்கட்குக் கருத்து என் எனின், இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தைத் தெரிவிப்பதேயாகும் இப் பாசுரங்களில் கூறப்படும் கல்வியாவது, இறைவனை நேரில் கண்டாற்போன்று அறிவினால் கண்டு அனுபவித்தல், பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் விரும்பி, அது பெறாமையாலே மனத்தின் அனுபவத்துக்கு வந்த கலக்கம் ஆயின், பேரருட் கடலாகிய இறைவன், இவர் அனுபவத்தை முடிய நடத்தாதே இவ்வனுபவத்தைப் பிரித்ததற்குக் கருத்து என் எனின், திருவயோத்தியிலும் கிருஷ்ணாவதாரத்தில் திருக்குரவையிலும் பிரிந்த பிரிவுபோன்று, இவர்க்கு அனுபவிப்பித்த குணங்களைப் பொறுப்பித்தலும் மேன்மேல் என் வேட்கை பிறப்பித்தலும் ஆம் இப்படியுள்ள கலவியாலும் பிரிவாலும் ஆழ்வார்க்கு வந்த நிலையே அந்யாபதேசப் பேச்சால் அகப்பொருள் துறைப் பாசுரங்களாக அமைந்தன ‘சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி ஞானகர்மங்களைச் சிறகு என்று குரு ஸ்ப்ரம்ஹசாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே பேசும்’ என்றார் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்

இந்நூலுக்கு ஐந்து வியாக்கியானங்கள் உள்ளன அவற்றுள், நம்பிள்ளை அருளிச்செய்ய, வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிய ஈடுமுப்பத்தாறாயிரப்படி’ என்னும் வியாக்கியானமே மிகமிக உயர்ந்தது இவற்றை ‘பகவத்விஷயம்’ என்று வழங்குதல் மரபு பகவானைப் பற்றிய விஷயம் என்பது பொருள்

திருவாய்மொழிப்பிள்ளை

பாண்டிய நாட்டில் குந்தி என்ற நகரத்தில் வைகாசி விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமலை யாழ்வார் என்பது இவருடைய இயற்பெயர் திருவாய்