பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

31

அகராதி முறையில் நிகண்டுகள் செய்யப் பலர் முயன்றபோலும், வீரை மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு கற்பாரிடையே மிகவும் போற்றப்பட்டு வந்தது திவாகரம், பிங்கலம் முதலியன சூத்திரயாப்பில் அமைந்துள்ளமையால் புலவர்களால் அன்றிச் சாமானியரால் எளிதில் கற்றுப் போற்ற இயலாத வகையில் அமைந்துவிட்டன சூடாமணியின் விருத்தயாப்பு மனனம் செய்வதற்கு உறுதுணையாய் அமையவே, அது ஏனையவற்றிலும் பெருகி வழங்கத் தலைப்பட்டது சூடாமணி நிகண்டில் அமைந்துள்ள பதினோராந் தொகுதியின் மரபில் எழுந்த நூல்களுள் காலத்தால் மிக முந்தியது அரும்பொருள் விளக்க நிகண்டு இந்நூல் ஓரெதுகை வருக்கத்தில் பிற எதுகைச்சொல் கலவாதபடி அமைந்துள்ளது

இது தோன்றிச் சுமார் ஒரு நூற்றாண்டு சென்ற பின்னர், நாநார்த்த தீபிகை என்ற அரிய நூல் (சுமார் 1850) எழுந்தது இது விருத்த யாப்பில் அமைந்த பெருநூலாகும் இந்நிகண்டு வடமொழிச் சொற்களைப் பெரிதும் மேற்கொண்டுள்ளது இதனை அடுத்து யாழ்ப்பாணத்து வைத்தியலிங்கம்பிள்ளை என்பவர் சிந்தாமணி நிகண்டு என்னும் நூல் செய்தனர் (1874) இதுவும் நாநார்த்த தீபிகையைப் போல வடசொற்களை மிகுதியாகத் தந்துள்ளது இருபதாவது நூற்றாண்டாகிய இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நிகண்டு நூல் ஒன்று செய்யப்பெற்றிருக்கிறது இந்த நிகண்டின் பெயர் விரிவு நிகண்டு என்பது இதனை இயற்றியவர் வீரவநல்லூர் நா அருணாசல நாவலராவர் இவர் சூடாமணி நிகண்டினை ஆதாரமாகக் கொண்டு பல வழக்குச் சொற்களுக்கும் பொருள் தந்துள்ளனர் திருநெல்வேலிப் பிரதேசத்து வழக்குக்கள் இந் நூலில் மிகுதியாக உள்ளன

ஒருசொல் பல்பொருள் நிகண்டுகளில் வரவரச் சொற் பெருக்கமும் அதிகரித்துள்ளது அரசியல் மாறுபாடுகளாலும், பிறமொழியாளர் கூட்டுறவினாலும்