பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

37

பற்றிய இலக்கணம் என்றும், ‘பொன் என்பது தகடாக்கவும் கம்பியாக்கவும் கூடிய மஞ்சள் நிறமுடைய உலோகம்’ என்பது போன்றதைப் பொருள் பற்றிய இலக்கணம் என்றும் கூறுவர் ஆனால் சொல்லுக்குப் பொருள் கூறுவது என்பது அது குறிக்கும் பொருளுக்கு இலக்கணம் கூறுவதேயாதலால் இவ்விரண்டிற்கும் வேறுபாடில்லை

இமைகொட்டல் என்பதைக் குழந்தைக்ளுக்கு விளக்க வேண்டினால் இமைகளைக் கொட்டிக் காட்டுகிறோம் பொருள்களை இது மரம், இது மாடு என்று சுட்டிக் காட்டுகிறோம் இவற்றைச் சிலர் சுட்டிக்காட்டும் இலக்கணம் என்பர் காய்கறிகள் என்பது வாழைக்காய், புடலங்காய் போன்றவை என்று கூறுவது போன்றவை உதாரண இலக்கணம் 'யானையானது மூக்கைக் கையாக உபயோகிக்கும் பிராணி’ என்று கூறுவது வருணனை இலக்கணம் ஆனால் இந்த மூன்றுவகை இலக்கணங்களிலும் இன்றியமையாத இயல்புகள் எல்லாம் குறிக்கப்படாதலாதல் இவைகளை இலக்கணங்கள் என்று கூறுவது பொருந்தாது

ஒரு பொருள் எவ்விதம் உற்பத்தியாகிறது என்பதைக் கூறி விளக்குவதை உற்பத்தி இலக்கணம் என்பர் ஒரு கோட்டின் ஒரு முனையை அசையாமல் நிறுத்திக் கொண்டு, மற்ற முனையைச் சுற்றினால் வட்டம் என்பது பெறப்படும் என்று கணித நூலார் வட்டத்துக்கு இலக்கணம் கூறுவர் விஞ்ஞானிகள் இந்த விதமாக இலக்கணங் கூறும் முறையையே பெரிதும் கையாள்கிறார்கள்

ஆயினும் மேனாட்டுத் தருக்க நூலாருடைய சம்பிரதாயப்படி, சாதி சிறப்பியல்புகள் வழியாகவே இலக்கணம் கூறுவது முறையாகும் அதாவது இலக்கணம் கூற விரும்பும் பொருள் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்றும், அதுபோன்ற மற்ற இனங்களிலிருந்து