பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

செந்தமிழ் பெட்டகம்

பிரித்துக் காட்டும் சிறப்பியல்பு யாது என்றும் கூறுவதாகும் உதாரணம் : முக்கோணம் என்பது மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் வடிவம் என்பது இதில் வடிவம் என்பது சாதியையும் மூன்று நேர்க்கோடுகளால் அடைக்கப்படுவது என்பது சிறப்பியல்பையும் விளக்குகின்றன

இலக்கண விதிகள் :

மேனாட்டுத் தருக்க நூலார் ஐந்து இலக்கண விதிகள் கூறுவர்:

1 இலக்கணமானது முக்கியமான எல்லாப் பண்புகளையும் கூறுவதாக இருக்கவேண்டும் மேற்கூறிய சாதி-சிறப்பியல்பு முறை இதற்குப் பயன்படும்

2 இலக்கணமானது இலக்கியமாகிய பொருளின் பண்புகளைக் கூட்டியும் குறைத்தும் கூறலாகாது அவை சமப்பரப்புடையவையாக வேண்டும் ‘மை என்பது எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம், பலப்பம் முதலிய வேறு எழுதும் பொருள்கள் இருப்பதால் வேறு பொருளையும் குறிக்கும் அதிவியாப்தி என்னும் குற்றமுடையதாகும் ‘மை கூறும் இலக்கணம் சிவப்பு பச்சை முதலிய மைகளை விலக்குவதால் குறைபாடாகிய அவ்வியாப்தி என்னும் குற்றமுடையாகும்

3 இலக்கணம் தெளிவாக இருக்க வேண்டும்; இரு பொருள் தரக்கூடிய மொழிகளும் அலக்கார நடையும் இல்லாததாயும் இருக்க வேண்டும் பொருளைத் தெளிவுபடுத்துவதே இலக்கணம் கூறுவதன் நோக்கமாகும் 'சிம்மம் மிருகேந்திரன்’ என்பது இலக்கணம் கூறுவதாகாது

4 இலக்கணத்தில் பொருளின் பதத்தையோ, அதன் திரிபையோ பரியாயப் பதத்தையோ உபயோகிக்கக் கூடாது ‘பறக்கும் சக்தியுடையது பறவை’ என்பதைப் போன்ற வாக்கியங்கள் இலக்கணப் பொருளை