பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

41

யாகும் எங்கெங்கு மண்ணுண்டு அங்கெல்லாம் மண் தன்மை உண்டு என்று சொல்லலாம் மண்ணுக்கு அப்பால் இல்லாமலும் (அதிவியாப்தி, மிகைபடல்), மண்ணில் ஓரிடத்திலின்றி அதன் எவ்விடத்திலும் நில்லாமலும் (அவ்வியாப்தி, குறைபடல்), மண்ணில் இல்லாததாகவே இல்லாமலும் (அசம்பவம், மாறுகொளல்) மண்ணாகிய இலக்கியத் தன்மையை, இம்மண்தன்மை எல்லை கட்டி வரைந்து கொள்கிறது; மண் தன்மையோடு நியதமாகப் பிறழ்ச்சி கொள்கிறது; மண் தன்மையோடு நியதமாகப் பிறழ்ச்சி இன்றி ஒருங்கு நிகழ்வது மண்ணின் சிறப்பியல்பாகிய மண முடைமையே ஆம்; அதுவே மண்ணின் இலக்கணம் என்பர் தருக்க நூலோர் எனவே, இலக்கியத் தன்மையை வரைந்துகொள்வதனோடு நியதமாய் ஒருங்கு நிகழ்வது இலக்கணம் என்பது தருக்க நூலோர் முடிவு இதுவே இலக்கணத்தின் இலக்கணமாகும்

இலக்கியம் என்பது ஆங்கிலத்தில் லிட்டரேச்சர் என வருவதற்கு நேரான தமிழ்ச் சொல்லாக வழங்கி வருகிறது. எனினும், பேச்சும் இலக்கியமே எனக் கொள்ளுதல் வேண்டும் இந்த இலக்கியத்தில் காணும் சிறப்பியல்பே - மொழி நடையின் சிறப்பியல்பே - இலக்கணம் என்று தமிழில் பெயர் பெருகின்றது “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல்” என்பது நன்னூல், மொழியைப் பேசிவரும்போது பேசுவோனும் கேட்போனும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொதுநிலை - அல்லது பொது மரபு இருத்தல் வேண்டும் இதுவே இலக்கணம் ஒருவகையால் நோக்கினால் இது வழக்காறே ஆகும் ஒரே இலக்கணமரபு உலகு எங்கும் பரவியில்லை மொழிக்கு மொழி இந்த மரபு மாறும்; காலத்துக்குக் காலமும் மாறும் இதனாலேயே வடமொழி, லத்தீன் முதலிய பழைய மொழிகள் வழக்கின்றிப் போக, அவர்களின் மாறிய வடிவங்களாகிய இந்தி, இத்தாலி முதலியவை