பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

49

மொழியில் வழங்கி இடம் பெறும் தமிழில் காலம், பால் முதலிய இலக்கணப் பாகுபாடுகள் இல்லாத நிலையும் இருந்திருக்கலாம்; பகுதிகள் வினைக்கும் பெயர்க்கும் பொதுவாக இன்றும் உள்ளன எழுவாய், செயப்படு பொருள், பயனிலை என்பது தமிழ் வாக்கியத்தின் பொது அமைப்பு இடைச் சொற்கள் முன்னொரு காலத்தில் தனிச்சொற்களாக விளங்கினவே என்பது இன்றும் விளங்குகிறது

இலக்கண விதிகள் இலக்கண நூல்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் அல்ல; வழக்காற்றின் மரபுகளாய்க் குறித்த காலத்தில் வழங்குவனவே இலக்கண நூல்கள் சூத்திர வடிவமாய்ச் சுருக்கமாக வழங்குவதற்கு வாய்ப்பாக இருப்பதால் ஐயம் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை எடுத்துக் காட்டுவது இயல்பாகிவிட்டது இதனால் அவை கட்டாயம் பின்பற்றத் தக்கன என்ற எண்ணம் பரவியது

கிரேக்க நாட்டில் குடியரசு பரவியபோது பொது மக்களிடையே கருத்துகளைத் தெள்ளத் தெளிய விளக்கிப் பேசி மனத்தைக் கவரும் பேச்சாளிகளுக்குச் சிறந்த இடம் தோன்றியது எவ்வாறு மனத்தைக் கவர்வது என்ற ஆராய்ச்சி மொழி இயலை ஆராய்வதாக முடிந்தது; இலக்கணம் தோன்றியது சொல்லின் ஒலிக்கும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு உண்டு என்ற நம்பிக்கைக் கோட்டை தகர்ந்தது; சொல்லுவோன் தருவதே பொருள் என்பது விளங்கியது இங்குப் பயன்படும் மரபுகளே இலக்கணம் என்பதாயிற்று 1 பெயர்ச் சொல், 2 வினைச் சொல் 3 பெயரடைச்சொல் 4 வினையடைச் சொல் 5 குறிப்புப் பெயர்ச்சொல் 6. மேல், கீழ் என்பன முதலாக வரும் முந்து அமைசொல் 7 சொற்றொடர்களின் பொருள்களை ஒற்றுமை நயத்தாலோ வேற்றுமை நயத்தாலோ தொடர்புபடுத்திச் செலுத்திவரும் and, but போலப் பிணைப்புச்சொல் 8