பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

செந்தமிழ் பெட்டகம்

உணர்ச்சி ஒலியாக வரும் ஒலிக் குறிப்புச் சொற்கள் என்ற இவையே எட்டுவகைச் சொற்கள் என மேனாட்டார் கூறலாயினர் ( a, an, the எனப்) பெயர் முன்னுருபு (article) என்பதொன்றும் உண்டு அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது

இலக்கணம் எந்நாளும் மாறாது ஒருதன்மைத்தாக இருப்பதனால் அன்றோ பேச்சாளி அதனை எளிதில் அறிந்து வெற்றிபெறுதல் கூடும்? இவ்வாறு ஒரு தன்மையதே என்றனர் ஒரு கொள்கையினர் ஆகையால் “வந்தான்” என்பதனை அறிந்தால், “தந்தான்” என்பதுபோல ஒப்புமை முறையால் பிற வடிவங்களை அமைத்தல்கூடும் என்றனர். இதுவே ஒப்புமைக் கொள்கை (anologg) “குதிரைக்குக் குர் ரம் என்றால் யானைக்கு யர் ரமோ” என்ற பழமொழியை அறிவோம் இதனை ஒட்டி, விதிகள் இருந்தாலும், விதிக்குப் பல புறனடைகளும் உண்டு என்பது புறனடைக் கொள்கை

ஒப்புமைக் கொள்கையினர் அரிஸ்டார்க்கஸ் என்ப வரைப் பின்பற்றினர்; புறனடைக் கொள்கையினர் கால்ட்ஸ் என்பரைப் பின்பற்றினர் ஒப்புமைக் கொள்கை சிலபோது இலக்கணக் கொடுங்கோலாக மாறுவதை இன்றும் காணலாம். ஆனால் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே இலக்கணம் எழுதி வந்தவர்கள் இந்தப் போராட்டத்தை ஒருவாறு நிறுத்தி, பெரிதும் விதிகளும் புறனடைகளும் கொண்டதே இலக்கணம் என முடிவு செய்தனர் கிரேக்க இலக்கணம் லத்தீன் இலக்கணத்திலும் நிழலிட்டது லத்தீன் இலக்கணம் ஐரோப்பா முழுதும் பரவிப் பிற மொழி இலக்கணங்களின் அடிப்படையாக முயன்றது 18 ஆம் நூற்றாண்டில் வட மொழியை மேனாட்டார் கற்கத் தொடங்கியதிலிருந்து வரலாற்று ஒப்பிலக்கணம் வளர்ந்து வருகிறது, விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி நிகழ்ந்து வருகிறது (தெ பா மீ)