பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

63

தவிர, முருகக் கடவுளின் ஆயுதமாகிய வேல், இரும்புக் கொடிப்பட்டம், வெண்கலத்தில் வார்த்தெடுத்த கோழி உருவம் முதலியவை கிடைத்துள்ளன முருகனுக்குக் கோழி வடிவம் பொறித்த கொடி அடையாளம் என்பது யாவருமறிந்த உண்மை முருகனுக்குக் காவடி எடுக்கும் அடியார்கள் வாயைத் துணியாலோ வேறு பொருளினாலோ மூடிக் கட்டிக்கொள்வது தொன்றுதொட்டு இருந்து வந்துள்ள தமிழ்நாட்டு வழக்கம்

கோழி வடிவமுள்ள சிற்பங்கள், பாலஸ்தீனம், சைப்பிரஸ் முதலிய நாடுகளில் காணப்படவில்லை அன்றியும் முருகனைப் போன்ற ஒரு கடவுளை அந்நாட்டு மக்கள் வழிபட்டனர் என்பதும் அறியோம் ஆயினும் பொன் வாய்முடியும் தலைக்கட்டும் அந்நாடுகளிலும் ஆதிச்ச நல்லூரிலும் காணக் காரணம் யாது? ஒருவேளை அங்கிருந்து தென்னிந்தியாவிற்கு வந்த வணிகர்கள் இத்தகைய அணிகலன்களை இங்கிருந்து தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம் ஆனால் திராவிடர்கள், தமது பிறப்பிடமாகிய மத்தியதரை நாட்டிலிருந்து இப் பழக்க வழக்கங்களை இங்குக் கொண்டுவந்திருக்கலாம் என்பது அதைவிடப் பொருத்தமாகப்படுகிறது

மத்தியதரை நாட்டு பழைய சமாதிக்குழிகள் ஏறத்தாழக் கி மு 2,500 முதல் 1,500 வரையுள்ள காலத்தவையென ஆராய்ச்சி வல்லுநர் திட்டப்படுத்தியுள்ளனர் தென்னிந்தியச் சமாதிகளில் இரும்பு காணப்படுவதால் இவை சற்றுப் பிற்காலத்தைச் சார்ந்தவை கி மு பத்தாம் நூற்றாண்டையடுத்துத் தென்னிந்தியச்சமாதிக் குழிகளும், அவற்றைச் சார்ந்த பண்பாடும் தோன்றி யிருக்கலாம் ஆகவே, திராவிடர் மத்தியதரை நாட்டிலிருந்து கி மு 2000-கிமு 1500-ல் புறப்பட்டுப் பலூசிஸ்தானம் வழியாக வடமேற்கு இந்தியாவை அடைந்து, பின்னர் ஆரியரது எதிர்ப்பால் தென்னாட்டை அடைந்து கடியேறினரென்பது இதுகாறும் கிடைத் துள்ள சான்றுகளால் ஒருவாறு தெளிவாகின்றது