பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

செந்தமிழ் பெட்டகம்

முறையே ‘திராமிட’ ‘திராமிள’ ‘தமிள்’ ‘தமிழ்’ என மாறிற்றொன்றும் சிலர் கருதினர் ஆனால் தமிழ் மொழியோ தொன்மை உடையது ஆரியர் தென்னாட்டுக்கு வந்து மொழித் தொடர்பு அமைப்பதற்கு முன்னதாகவே வளம் பெற்றிருந்தது அறிஞர் சீனிவாசப் பிள்ளை விளக்கியிருப்பது போல் இத்துணைத் தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்குப் பிறர் பெயர் அளிக்கும் வரையில் பெயரில்லாமலிருந்திருக்க முடியாது மேலும் ‘ழ’ என்ற எழுத்துத் தமிழுக்குத் தனிப்பட்ட முறையிலமைந்தது இந்தியாவில் வேறு எங்கும் காணோம் தமிழ் என்பது ‘தமி' அல்லது இனிமை எனப் பொருள் தரும் சொல்லிருந்து தோன்றியதாகப் பலர் கருதுகின்றனர் எனவே தமிழிலிருந்து திராவிடம் காலப் போக்கில் மாறியிருக்கலாமென்ற கொள்கையைப் பலரும் ஆதரிக்கின்றனர் வேறு சிலர் திராவிடம் என்ற சொல்லே ஆரியரல்லாதாரிடமிருந்து ஆரியர் முதலில் பெற்றிருக்கலாமெனக் கருதுகின்றனர்

இது எப்படிருப்பினும் கி மு மூன்றாம் நூற்றாண்குக் முன்னரே தமிழ் வளர்ச்சி பெற்ற நிலையை அடைந்ததெனக் கருதலாம் மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட சிறு கல்வெட்டுக்கள் ஆங்காங்குச் சில பிராகிருதச் சொற்கள் சேர்ந்திருப்பினும், பொதுவில் தமிழ் மொழியிலுள்ளவையெனப் பலர் கூறுகின்றனர் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தோன்றியுள்ள சங்க நூல்கள் அக்காலத்திற்குமுன் தமிழ் முதிர்ச்சி பெற்ற நிலையை அடைந்ததென்பதைத் தெரிவிக்கின்றது

கன்னடம்:

கன்னட நாட்டில் ஏறத்தாழ கி மு ஐந்தாம் நூற்றாண்டு வரையில் தமிழையே கையாண்டிருக்க வேண்டும் அதற்குப்பின் ‘பூர்வத ஹளகன்னடம்' என்ற பழைய கன்னடம் உருவானது கி பி இரண்டாம்