பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

செந்தமிழ் பெட்டகம்

போதிலும் அடப்படையாக சமஸ்கிரு தத்திலே அது அமைந்துளது கி பி 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னய்யரின் பாரத மொழிபெயர்ப்புத்தான் முதன் முதல் தெலுங்கில் உருவான சிறந்த இலக்கிய நூல் எனலாம்

மலையாளம் :

இது திராவிட மொழிகளில் ஒன்றென்பதை யாவரும் ஒப்புக்கொண்டபோதிலும் இதன் தோற்றம் பற்றி ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகள் தோன்றியுள்ளன தமிழிலிருந்து மலையாளம் தோன்றினதாகவே மிகப் பலரும் கருதி வந்துள்ளனர் கிறிஸ்து சகாப்தத்தின் முன்னரே, 'செந்தமிழ்’, ‘கொடுந்தமிழ்’ என இருவகையாகத் தமிழ் வேறுபட்டு வளர்ந்தது. செந்தமிழ், இலக்கிய முறையில் தனித் தமிழாக முதிர்ச்சி பெற்று வந்தது கொடுந் தமிழோவெனின் பேச்சு முறையில் வழக்கிலிருந்ததே தென்னிந்தியாவில் மேற்குக் கடலோர நாட்டில் கொடுந்தமிழ் வழக்கத்திலிருந்தது

கொடுந்தமிழின் ஒருவகையான நிலையிலிருந்தே நாளடைவில் மலையாளம் தோன்றிற்றென்பது பலருடய கருத்து ஏறத்தாழ கி பி 5ஆம் நூற்றாண்டில் இம்மாற்றம் தொடங்கியதெனலாம் ஆனால் இக்கருத்துக்கு முரணாக மலையாளம் தனிப்பட்டுத் தோன்றிய மொழி, தமிழே அதிலிருந்து தோன்றியது என்ற கொள்கையைச் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இக் கொள்கைக்கு அடிப்படைச் சான்றுகளில்லை தென்னாட்டு மொழி வரலாற்றுக்கும் அது ஒத்திருப்பதாகக் காணப்பட வில்லை முதன் முதல் பழைய மலையாளத்தில் தோன்றியவை மக்களின் பாட்டுக்களாகும் ஏறத்தாழ, கி பி 9 ஆம் நூற்றாண்டு முதலாகப் பிராமணிப் பாட்டு, சாஸ்தாப்பாட்டு, ஓணப் பாட்டு, திருவாதிரைப் பாட்டுப் போன்ற பாட்டுவகைகள் தோன்றின பெரும்பாலும்