பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

செந்தமிழ் பெட்டகம்

சேர்த்தல் ஓர் இயல்பு ( த பால்-பாலு; ம கல்-கல்லு; தெ மந்-மந்து)

வல்லோசையுடைய மெய்யெழுத்துக்கள் சில சொற்களின் இடையிலும் கடையிலும் அவ் வல்லோசையினின்று நெகிழ்ந்து மெல்லோசை பெறுதல் உண்டு (கடவுள், அகம், மதகு ஆகிய சொற்களில் வரும் ‘க்’ ஒலியை ஒப்பிட்டுப் பார்க்க) திராவிட மொழிகள் ஒன்றனுட் சில சொற்களில் வரும் ழகரம் வேறு திராவிட மொழிகளில் ளகரம் அல்லது டகரம் ஆதல் உண்டு (த கோழி; தெ கோடி; க கோளி) வல்லோசைகளில் முடியும் சொற்களின் ஈற்றெழுத்திற்கு முன்னால் ஒரு மெல்லின எழுத்துத் தோன்றுதல் என்பது ஒரு வழக்காகக் காணப்படுகிறது (த ஈடு-ஈண்டு; இரடு-இரண்டு) உயிரெழுத்துக்கள் இருமருங்கும் வரும் இடங்களில், அவற்றை இயைத்து வைக்கக்கூடிய உடம்படுமெய் என்பது தோன்றுதல் ஒரு வழக்கம் அவ்வாறு தோன்றும் உடம்படுமெய் ம், ந், வ், ய் என்பவற்றுள் ஒன்று

திராவிட மொழிகளில் இரண்டு அல்லது மூன்று மெய்யெழுத்துக்கள் கூடி நின்று சொற்களின் தொடக்கத்தின்கண் வரமாட்டா; அவ்வாறே ஈற்றிலும் நிற்க மாட்டா ஆங்கிலத்தில் ஸ்ட்ரெங்த் என்று வருதலைப்போலத் திராவிட மொழிகளில் வருதல் இயலாது சொற்களின் உச்சரிப்பை எளிமைப்படுத்துதற்காக அவற்றின் இடையில் உகரம் சேர்க்கப்படுவதுண்டு (சமஸ் தத்வ; த தத்துவம்) திராவிட மொழிகளில் அசையழுத்தம் இல்லை (ஆங்கிலத்தில் கன்ட்ராக்ட் என்பது வினைச் சொல்; கான்ட்ராக்ட் என்பது பெயர்ச்சொல்) இதைப்போன்ற வேறுபட்ட அசையழுத்தத்தினால் ஆங்கிலத்திற் பொருள் வேறுபாடு விளைதலைப்போலத் திராவிட மொழிகளில் உண்டாதல் இல்லை

திராவிட மொழிகளில் உள்ள அடிவேர்கள் வினைப் பொருள்களிலும் பெயர்ப் பொருள்களிலும்