இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பட்டது அதன் பயனாவே பின்னாட்களிற் பல்வேறு மொழிகளுக்குப் பல ஒப்பிலக் கணங்கள் அமைக்கப்பட்டன. இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குப் புரூக்மன் என்பவரால் புதுவதாக ஒரு பொது ஒப்பிலக்கணம் 1916-இல் வெளிப்படுத்தப்பட்டது
எனினும், திராவிட மொழிகளுக்கு டாக்டர் கால்டு வெல் (1819-91) அமைத்த ஒப்பிலக்கணம் கால்டுவெல்லிற்குப் பிறகு தோன்றியுள்ள புதுக் கருத்துக்களை ஒட்டியும், கிடைத்துள்ள புதுச்சான்றுகளை ஒட்டியும் திருத்தி அமைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளது