பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

83

தொடர்புடையதாக விளங்கும் யவனர், சீனம், அவி முதலிய பழைய சொற்களும், அலமாரி, சாவி, பரங்கி முதலிய பிற்காலச் சொற்களும் இவ்வாறு நாட்டு மக்களின் வரலாற்றோடு தொடர்பு கொண்டிருத்தலைக் காணலாம்

பிறமொழிச் சொற்களை ஆராயும்போது இரண்டு மொழிகளில் ஒரேவகைச் சொல் இருத்தலைக் கண்டு, அந்த மொழியிலிருந்து இந்த மொழிக்கு வந்தது என்று சொல்லிவிடலாகாது அதற்கு நேர்மாறாக இந்த மொழியிடமிருந்து அந்த மொழிக்குப் போயிருக்கக் கூடும் ஆகவே இருமொழிகளையும் ஒருங்கே ஆராய்ந்து, அந்தச் சொல் எந்த மொழியில் எந்தக்காலத்தில் மிக்க அளவில் வேரூன்றி வாழ்ந்தது என்பதை ஆராய்ந்து அந்தந்த மொழிகளின் ஒலியியலையும் ஆராய்ந்து, ஒலித்திரிபுகள் அறிவிக்கும் போக்கையும் ஆராய்ந்து, பிறகுதான் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும்

சொல் வடிவியல் :

எல்லா மொழிகளிலும் மிகப் பழங்காலத்தில் எழுதும் வழக்கம் தோன்றுவதற்கு முன்பு நீண்ட ஒலித்தொடர்களே இருந்து வந்தன. அவை நாளடைவில் தேய்ந்தும் திரிந்தும் சிறு சிறு சொற்களாக வடிவம் பெற்றன. ஆங்கிலத்தில் இப்போது nad என்று வழங்கும் மூன்றெழுத்துச் சொல், (habaidedeime) என்ற பன்னிரண்டு எழுத்துக்களால் ஆகிய பழஞ்சொல்லின் தேய்ந்து திரிந்த வடிவம் என்று கூறப்படுகிறது இவ்வாறே தமிழிலும் இன்று நீ, போ, வா முதலாக உள்ள ஓரெழுத்துதொரு மொழிகள் ஒருகாலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட சொற்களிலிருந்து பிறந்து அமைந்தவைகளே ஆகும்

மக்களின் கருத்தை உணர்த்தும் கருவிகளாகிய சொற்களின் வாயில் பயின்று வழங்க வழங்க, எளிதில் பேசுவதற்கு உரிய சிறுசிறு சொற்களாக மாறி