பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

87

தம் நிலை இழந்து சொல்லுறுப்புக்களாகப் பயன்படுகின்றன

பெயர்ச்சொற்களில் திணையும் பாலும் எண்ணும் வேற்றுமையும் ஆகிய வேறுபாடுகளை உணர்த்து வதற்காக விகுதிகளும் உருபுகளும் சேர்கின்றன தமிழில் திணை, பால், எண் ஆகிய மூன்றும் ஒரே விகுதியால் உணர்த்தப்படும் நிலைமை பெரும்பாலும் உள்ளது கண் என்ற சொல்லோடு அன் என்னும் விகுதிசேர்ந்து கண்ணன் என்று அமைவதால், உயர்திணை என்பதும், ஆண்பால் என்பதும், ஒருமை என்பதும் ஆகிய மூன்றும் விளங்குகின்றன. கண்ணனை, கண்ணனால், கண்ணனுக்கு முதலியவற்றில் ஜ, ஆல், கு முதலான உருபுகள் சேர்ந்து பொருள் வேறுபாடு உணர்த்துகின்றன

வினைச்சொற்களில் கால வேறுபாடுகளே உணர்த்தப்பட வேண்டியவை தமிழில் வினையெச்சம், பெயரெச்சம் ஆகிய வினைச்சொற்களில் கால வேறுபாடுகள் மட்டுமே உணர்த்தப்படுகின்றன (நடந்து, நடந்த, உண்டு, உண்ட) இவை தவிர, வாக்கிய முடிவைப் புலப்படுத்தும் வினைச்சொற்கள் வேறு உள்ளன. அவை வினைமுற்றுக்கள் எனப்படும் அவற்றில் காலம் மட்டும் அல்லாமல் திணை, பால், எண் ஆகியவைகளும் உணர்த்தப்படுகின்றன (நடந்தான், உண்டான்) காலம் உணர்த்தும் உறுப்புக்கள் இடைநிலை என்றும், திணை முதலியவற்றை உணர்த்தும் உறுப்புக்கள் விகுதிகள் என்றும் தனித்தனியே உள்ளன

வடமொழி முதலான மொழிகளில் உட்பிணைநிலை மிகுதியாக இருப்பதால், காலம் உணர்த்தும் உறுப்புக்கள் தனியே பிரிக்கக் கூடியவைகளாக நிற்காமல், விகுதிகளோடு கலந்து பிணைந்துள்ளன ஆதலின் அந்த மொழிகளில் விகுதிகள் காலம் முதலிய பலவற்றையும் ஒருங்கே உணர்த்துகின்றன சொல் வடிவில் உட்பிணைநிலை மிகுதியாக உள்ள மொழிகளில், பெயர்ச்சொல் உருபு