பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

97

சமஸ்கிருதத்திலிருந்து பிறந்து வளர்ந்தனவாகும் இந்திய மக்களுள் சுமார் முக்கால் பகுதியினர் சமஸ்கிருத மரபைச் சார்ந்த இந்த மொழிகளைப் பேசுபவராக இருக்கின்றனர்

தென்னாட்டிலுள்ள திராவிடக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைத் தவிர மற்ற வளர்ச்சி பெற்ற வடஇந்திய மொழிகளெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தனவே தென்மொழிகளும் சமஸ்கிருதத்தினுடனும், சமஸ்கிருதத்திலிருந்து வந்த பாலி, பிராகிருத மொழிகளுடனும் பண்டைக் காலந்தொட்டு கூடவே வளர்ந்து வந்ததாலும், இலக்கண இலக்கியங்களில் இவ்விரண்டிற்கும் கொடுக்கல் வாங்கல்கள் இருந்து வந்ததாலும், எல்லா இந்திய மொழிகளின் இலக்கணத்தையும் வரலாற்றையும் ஆராய்வதற்கு சமஸ்கிருத ஆராய்ச்சி அவசியம் வேண்டியதாகும்

மொழிகளின் ஆராய்ச்சியிலே ஒப்பு மொழியியல் என்ற புதுத்துறையானது கிபி 1786-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதத்தைப் படித்து, அம்மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமுள்ள தொடர்பைக் கண்டுபிடித்தனலேயே ஏற்பட்டனாதாகும்

ஜோன்சைப் பின்தொடர்ந்து கோல்புரூக், பாப், கிரிம், மாக்ஸ்முல்லர், புருக்மன், விட்னி முதலிய மொழிப்புலவர்கள் இம்மொழியாராய்ச்சித்துறையில் மேலும் பாடுபட்டு இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்குள்ள பொது இயல்புகளைச் சேர்த்து, இம்மொழிக் கூட்டத்தின் மரபாக இருக்கும் இலக்கணங்களை வகுத்து, இக்குடும்பத்துக்குள்ளே வரும் உலக மொழிகள் இன்னின்னவென்று காண்பித்தார்கள்

எழுத்து :

சமஸ்கிருத மொழியானது மனப்பாடமாகக் குரு சிஷ்ய முகமாகத் தொன்றுதொட்டுப் பாதுகாக்கப்-

செ பெ- 7