பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

செந்தமிழ் பெட்டகம்


வஞ்சி நாடகமென்பது நொண்டி நாடகம் என்பதைப் போல் இடைக்காலத்தின் பிற்பகுதியில் உண்டான நாடகப் பிரிவாம்; குறவஞ்சி நாடகங்களும் நொண்டி நாடகம் என்பதைப் போல் இடைக்காலத்தின் பிற் பகுதியில் உண்டான நாடகப் பிரிவாம்; குறவஞ்சி நாடகங்களும் நொண்டி நாடகங்களும் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றைக் கொண்டு ஊகிப்பதனால் அக்காலத்தில் தமிழ் நாடகங்களெல்லாம் பெரும்பாலும் இசை கலந்தேயிருந்தன எனலாம். அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகமும் இராமசந்திரக் கவிராயர் இயற்றிய பாரத விலாசமும் மேற்குறித்தவைகளைப் போல் எல்லாம் பாட்டுக்கள் அடங்கியவையே.

இனி இக்காலத்திய தமிழ் நாடகங்களைப் பற்றி ஆராய்வோம். இவை 19-ஆம் நூற்றாண்டில் எழுந்தவை. இவற்றுள் பல ஒலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன; இரணிய சம்மார நாடகம், புரூரவ சக்கரவர்த்தி நாடகம், உத்தர ராமாயண நாடகம், மார்க்கண்டேயர் நாடகம் முதலியவைகளை உதாரணமாகக் கூறலாம். இவை ஏறக்குறைய எல்லாம் புராணக் கதைகளைத் தழுவியவாம். இவை பெரும்பாலும் பாட்டுக்களாலாகியவாயினும், ஆங்காங்கு வசன மொழிகளும் கலந்திருக்கின்றன. இப்படிப்பட்ட சில நாடகங்கள் அச்சிடப் பட்டிருக்கின்றன இவற்றில் தெய்வ வணக்கமாகவுள்ள திபதை அல்லது தோடயம் என்னும் இரண்டடிப் பாட்டுக்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதன் பின் கட்டியக்காரன் வருவதாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கட்டியக்காரன் சமஸ்கிருத நாடகங்களில் வரும் சூத்திரதாரன் அல்லன் என்பது குறிக்கத்தக்கது. சமஸ்கிருத நாடக சூத்திரதாரன் நாடகத்தின் ஆரம்பத்தில் மாத்திரம் வந்து பிறகு வருவதில்லை. கட்டியக் காரனோ முதலிலிருந்து கடைசிவரையில் தோன்றுவான். இவனது முக்கியமான வேலை அவ்வப்போது இன்னார் அரங்கத்தில் தோன்றுகிறார்கள் என்று கட்டியம் கூறுவதாகும். உதாரணமாக, “அகோ எப்படி என்றால்,