பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

109


விட்டது என்பதற்குச் சந்தேகமில்லை. கூத்தாடி என்னும் பெயரே ஒரவகைச் சொல்லாக வழங்கப்பட்டது. இதைக் கொண்டு அக்காலத்து மக்கள் நாடகங்களை எவ்வாறு மதித்தனர் என்று ஊகிக்கலாம்.

சென்ற பத்து நூற்றாண்டுகளில் கவிச்சக்ரவர்த்தி கமபர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலிய பெருமை வாய்ந்த கவிஞர்கள் நாடகங்கள் ஒன்றேனும் எழுதாதற்கும் காரணம் விளங்கவில்லை.

இனி, சென்ற நூற்றாண்டுகளில் கடைசியில் தமிழ் நாடகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஆராய்வோம். சுமார் கி.பி.1870 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடகங்கள் மறுபடியும் தலையெடுக்க ஆரம்பித்தன என்று ஒருவாறு கூறலாம். முதலாவதாக, வெட்ட வெளியிலும் தெருக்களிலும் நாடகங்களை ஆடுவதை விட்டுக் கீற்றுக் கொட்டகைகளில் ஆடத் தொடங்கினர். பின்பு மண் மேடை எழுப்பி, அதை அரங்கமாகக் கொண்டு அதன் மீது நடித்தனர்; திரைகளை அரங்கத்தில் கட்டினர். காடை விளக்குகளுக்கும், பந்தங்களுக்கும் பதிலாக மண்ணெண்ணெய் விளக்குகள் அரங்கத்தின் மீது தொங்கவிடப்பட்டன. நடிகர்கள் நாடகங்களுக்குத் தக்கவாறு வெவ்வேறு உடைகள் அணிந்தனர்.

இக்காலத்து நாடகங்களிலிருந்த முக்கியக்குறைகள்:

இக்காலத்திலும் பழைய வழக்கப்படி நாடகங்கள் இரவெல்லாம் நடத்தப்பட்டன. தக்கபடி நாடக பாத்திரங்கள் வேடம் புனைவதில் கொஞ்சம் சீர்திருத்தம் உண்டான போதிலும், நாடகத்தின் முக்கியப் பாத்திரங்கள் விலை உயர்ந்த சரிகை, சம்கி ஆடைகளையே தரிக்க வேண்டும் என்பது வழக்கமாயிருந்தது. உதாரணமாக அரிச்சந்திர நாடகத்தில் அரிச்சந்திரன் மயானத்தில் வெட்டியானாகக் காக்கும் காட்சியிலும் சரிகை வேலை செய்த வெல்வெட் நிஜாரை அணிந்து கொண்டு, கம்பளத்திற்குப் பதிலாக, சரிகைச் சால்வை ஒன்றைக்