பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

111

.

வந்த நாடக குழுக்கள், நடத்தியதாகும். மஹாராஷ்டிர மொழியில் சில நாடகங்கள் நடத்தியதாகும். மஹாராஷ்டிர கம்பெனிகள் மூலமாகத் தமிழ் நாடகங்களில் உண்டாகிய மாறுபாடுகள்: நாடகம் தொடங்கு முன் தெய்வ வணக்கமாகிய விநாயர், சரஸ்வதி பூஜைகள் ஆவதும், பிறகு சூத்திரதாரனும் விதுரஷகனும் வந்து நாடகக் கதையைச் சுருக்கமாக சபையோருக்குத் தெரிவிப்பதுமாம். சூத்திரதாரனும் நடிகனும் முதலில் வரும் வழக்கத்தை அவர்கள் சமஸ்கிருத நாடகங்களி லிருந்து கற்றனர் போலும்.

அன்றியும் சுமார் 1875 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து இராயபுரம் ரெயில்வே நிலையத்தில் ஆடிய பார்சீ கம்பெனியிடமிருந்து அரங்கத்தை மறைக்க விடப்படும் முன்திரையின் பின்னால் பல திரைகளைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைக்கும் வழக்கம் பரவலாயிற்று.

மகாராஷ்டிர கம்பெனிகள் தஞ்சாவூருக்கு வந்ததன் பயனாக, அவ்வூர்வாசியாயிருந்த காலஞ்சென்ற கோவிந்தசாமி ராவ் என்னும் மகாராஷ்டிரர் மனமோகன நாடகக் கம்பெனி என்று ஒரு தமிழ் நாடகக் கம்பெனியை ஏற்படுத்தி, அதைக் கொண்டு பல தமிழ் நாடகங்களைப் புது முறையில் நடத்த முற்பட்டார். தமிழ் நாட்டில் தமிழ் நாடகம் புத்துயிர் பெற்றதற்கு இவர் முக்கிய காரணமாயிருந்தார் எனலாம். இவர் செய்த முக்கியமான சீர்திருத்தம் என்னவெனில், நாடகத்தில் சங்கீதம் மிகுதியாக இருப்பதைக் குறைத்து, வசனங்களை மிகுதியாகக் கையாண்டதாகும். இவர் பெரும்பாலும், பாரத ராமாயண இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும், கதைகளைப் பொறுக்கி, நல்ல முறையில் நாடகங்களாக ஆடி வந்தனர். -

இதன் பிறகு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னையில் அமெச்சூர் நாடக சபைகள் உண்டாயின. இதுவரையில் நாடகமாடிய கம்பெனிகள் அந்நாடகங்களைக் கொண்டு வாழ்ந்து வந்தன. சுமார்