பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

செந்தமிழ் பெட்டகம்


1891 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட சுகுணவிலாச சபை முதலிய அமெச்சூர் சபைகள், நாடகக் கலையை அபிவிருத்தி செய்வதற்கதாகவே ஏற்பட்டவை அங்கத்தினர்களெல்லாரும் நாடக மாடுவதற்கு ஒர் ஊதியமும் பெறாமல் பொழுது போக்கிற்காகவே ஆடினவர்கள், இப்படிப்பட்ட நாடக சபைகள் தமிழ் நாட்டு நாடகங் களில் பல சீர்திருத்தங்களை உண்டாக்கின

முதலாவதாக இரவெல்லாம் நாடகமாடும் பழக்கத்தை அறவே நீக்கி, இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து; நான்கு ஐந்து மணி நேரத்திற்குள்ளாக நாடகத்தை முடிக்கும் வழக்கம் வந்தது. பிறகு, சரியாகக் குறித்த மணிக்கு நாடகத்தை ஆரம்பித்துச் சற்றேறக் குறையக் குறித்த நேரத்திற்குள் முடிக்கும் வழக்கமும் வந்தது. சூத்திரதாரனும் விதுரஷகனும் முதலில் வரும் வழக்கமும், சபையோரைப் பிரமிக்கச் செய்வதற்காக மோகினி ராஜன், மோகினி ராணி வரும் வழக்கமும் அடியுடன் விடப்பட்டன. நாடகக் கதையின் சுருக்கம் அச்சிடப்பட்டுச் சபையோருக்கு கொடுக்கப்பட்டது. சங்கீதமயமாயிருந்த நாடகமானது வசன நாடகமாக மாற்றப்பட்டது. அந்த வசனத்திலும் பழைய கூத்துக் களில் வழங்கி வந்த பல ஆபாசமான மொழிளெல்லாம் அறவே நீக்கப்பட்டன.

முக்கியமாக அமெச்சூர் நாடக சபைகளால், நாடக சங்கீதத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டதெனலாம். முதன் முதலாக இதுவரையில் நாடகத்திற்கு இன்றியமையாதது என்று கருதப்பட்ட பின்பாட்டு நீக்கப்பட்டது. பக்க வாத்தியக்காரர்கள் மேசையின்மீது நடிகன் பாடும்போது அவனுடன் ஒத்து வாசிக்க வேண்டுமேயொழியத் தனியாக வாசிக்கக் கூடாது என்னும் நியமம் ஏற்பட்டது. அன்றியும் ஒவ்வொரு நாடகத்திலும் தோன்றும் ஒவ்வொரு நாடக பாத்திரமும் அரங்கத்தில் தோன்றும் போதும் அதை விட்டுப் போகும் போதும் ஏதாவது பாட்டைப் பாட வேண்டும் என்றிருந்த சம்பிர