பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

செந்தமிழ் பெட்டகம்


அரங்கத்தின் நடக்கும் காட்சிகளுக்குத் தக்கபடி, பின் திரைகள் விடுவதும், அவற்றுக்கு எற்றவாறு பக்கத் துண்டுத் திரைகள் ஏற்படுத்துவதும், மேல் தொங்கட்டங்களை அமைப்பதும், அமெச்சூர் சபைகளின் மூலமாகத் தான் தமிழ் நாடக மேடையில் ஒழுங்காகக் கொண்டு வரப்பட்டன. அன்றியும் காட்சிகளுக்குத் தக்கபடி அரங்கத்தில் சாமான்களை வைத்து ஜோடிக்கும் ஏற்பாடும் இவை மூலமாகத்தான் பரவியது எனலாம்

நாடகமாடுவதென்றால் நடிகர்கள் எந்தப் பாத்திரமாயிருந்த போதிலும், சரிகைத் துணிகள், சம்கி உடுப்புகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிய வேண்டும் என்னும் தவறான அபிப்பிராயம் மாறி, ஒவ்வொரு நாடகப் பாத்திரமும், கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி அணிகளையும் ஆடைகளையும் அணிய வேண்டுமென்று வற்புறத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் விட, இந்தச் சபைகள் தமிழ் நாடகத்திற்குப் புரிந்த சிறந்த தொண்டாவது, பழைய இதிகாச புராணக் கதைகளை ஆடுவதோடு, வரலாற்று நாடகங்களையும், சமூக நாடகங்களையும, தமிழ் நாடக மேடையில் புகுத்தியதேயாம். அன்றியும் சமஸ்கிருத நாடகங்களை ஒட்டி எந்த நாடகமும் துன்பியல் நாடகங்களை ஆடும் வழக்கம் தான் உண்டாயிற்று. கற்றறிந்தவர்கள் நடிக்கும் இந்த அமெச்சூர் சபைகளின் மூலமாகத்தான் நாடகமாடுவது இழிதொழிலாய் என்று அதுவரை இருந்த எண்ணம் மாறி இதுவும் கலையை வளர்க்கும் சிறந்த தொழில்களில் ஒன்று, இதில் எல்லா மேன்மக்களும் கலந்து கொள்ளலாம் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக பரவலாயிற்று.

இடைக்காலத்தில் வெளிவந்த தமிழ் நாடகங்கள் அங்கங்களாகவும் காட்சிகள் அல்லது களங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. சுமார் 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த நாடகங்களே அங்கங்களாகவும் காட்சிகளாகவும் முதன் முதலில் பிரிக்கப்பட்டன. இது