பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

115


ஷேக்ஸ்பியர் முதலிய பிரபல நாடகாசிரியர்கள் எழுதிய முறையெனலாம், இக்காலத்தில் ஷேக்ஸ்பியர் முதலிய பிரபல நாடகாசிரியர்கள் எழுதிய நாடகங்களின் மொழிபெயர்ப்புகளும் தழுவல்களும் தமிழ் நாடக மேடையில் பரவலாயின. அன்றியும் இவைகள் மூலமாக, நாடகங்களில் காட்சிகளின் குறிப்புகளும், நாடக பாத்திரங்கங்கள் செய்ய வேண்டிய காரியங்களின் குறிப்புக்களும் தமிழ் நாடகங்களில் எழுதப்பட்டன.

வடநாட்டில் வழங்கி வரும் பஞ்சாபி, மகாராஷ்டிரம் முதலிய மொழிகளில் எழுதப்பட்ட சில நாடகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன:

ஏறக்குறைய இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களும் தமிழ் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பல துறைகளிலும் தமிழ் நாடகமானது சுமார் 1920 ஆம் ஆண்டு வரை விருத்தி அடைந்தது. நாடகமாடுவது இழிதொழில் என்னும் எண்ணம் மாறிக் கற்றறிந்த ஆடவர்களும் பெண்டிரும் நாடகமாட முன்வந்தனர். ஜீவனத்திற்காக இத்தொழிலை மேற் கொண்ட நாடகக் கம்பெனிகளும் அமெச்சூர் சபைகளும் தமிழ் நாடெங்கும் தோன்றின.

வெண்ணெய் திரண்டு வருஞ் சமயம் தாழி உடைந்தது போல், சினிமாக்கள் தமிழ் நாட்டில் தோன்றித் தமிழ் நாடகங்களைப் பலவிதங்களில் குன்றச் செய்து விட்டனவெனலாம். இந்த வெள்ளித் திரைப்படங்கள் முதலில் மெளனப் படங்களாகத் தானிருந்தன. அப்படியிருக்கும் வரையில் அவற்றால் தமிழ் நாடக மேடைக்கிருந்த பெருமையும் பொது மக்கள் மதிப்பும், ஆதரவும் குறையவில்லை. பேசும் படங்கள் வந்த பிறகு இவையல்லாம் மாறிவிட்டன. இப்படங்களின் புதுமை அவர்கள் மனத்தைக் கவர்ந்தது. அன்றியும் தமிழ் நாடக மேடையில் பெயர் பெற்ற சிறந்த நடிகர்களும் நடிககைகளும் மேடை மீது ஆடுவதை விட்டுச் சினிமாக்