பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

121


சுவைக்கென ஏற்பட்ட சிறிய நாடகம். இதில் மக்களின் கெட்ட நடத்தையும் காட்டிப் புரளி செய்து, சீர்திருத்தம் எற்படும்படி காட்டுவர். பாணம், ஒரே பாத்திரம் கதை முழுதும் பலர் குரலைத் தானே காட்டி, வினாவிடை இரண்டையும் தானே சொல்லும்படி அமைத்திருக்கும் வகையாகும். பின்னால் சொல்லப்படும் பல உபருபக வகைகளில் எல்லாம் பாட்டும் ஆட்டமும் அதிகமாக அமைந்திருக்கும். இவற்றைத் தவிர முத்திராராட்சஸம் போன்ற அரசியல் நாடகமும், பிரபோத சந்திரோதயம் போன்ற வேதாந்த நாடகமும், மற்றும் பல வகைளும் தோன்றின.

‘நாடகம் இறுதியாகக் கவித்துவம்’ என்றும் ‘இலக்கியத்தில் நாடகமே சிறந்தது; அதே முழு மலர்ச்சியுமாகும்' என்றும் சமஸ்கிருதத்தில் கூற்றுக்கள் வழங்குவதிலிருந்து பண்டை இந்தியாவில் நாடகத்திற்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டது தெரியும். மக்களும் இக்கலையை இடைவிடாமல் நுகர்ந்து களித்தனர்; அரசாங்கமும் கோவில்களும் போற்றி வந்தன. ஆனது பற்றி, நாடக இலக்கியத்தில் நிகரற்ற கவிகள் தம் கற்பனைகளைப் படைத்தனர்.காளிதாசனின் சாகுந்தலம், சூத்திரகனின் மிருச்சகடிகம் இரண்டும் மேனாட்டு இலக்கிய அறிஞராலும் இன்றும் போற்றப்படுகின்றன.

நாடகங்களும் கணக்கில்லாமல் எழுதப்பட்டன. அச்சில் வந்திருப்பவை சில. மறைந்துபோனவை பல. ஏட்டுச் சுவடிகளாக நூல் நிலையங்களிற் கிடக்கும் நாடகக் குவியலுக்குக் கணக்கே இல்லை. இப்படியே ஆட்ட முறையைப் பேசும் இலக்கண நூல்களும் பரதர், கோஹனர் இருவரையும் தழுவி நூற்றுக்கணக்காக எழுந்தன.

சமஸ்கிருத நாடகத்தில் கவி முக்கியமாய்க் கவனித்து அமைப்பது சுவை. சிருங்காரம், வீரம் முதலியவற்றை இதற்கு ஆதாரமாகக் கவனித்துத் தக்கபடி கதை அமைத்துக் கொள்ளப்படும். கதையின் போக்கை வித்து,