பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

செந்தமிழ் பெட்டகம்


தொடர்ச்சி, உதவும் நிகழ்ச்சிகள்,காரிய முடிவு என்றும், இவற்றிற்குச் சரியாகத் தலைவனின் செயலில் தொடக்கம், முயற்சி, கைகூடும் என்ற நம்பிக்கை, உறுதி, பயன் ஏற்படுவது என்ற ஐந்து நிலைகளும், இவ்விரண்டும் சேர்ந்து நாடகத்தின் ஐந்து சந்திகள் என்று ஆராய்ந்து அமைத்தனர்.

மேலே சொன்னபடி, சமஸ்கிருத நாடகத்தில் இறுதியிலோ நடுவிலோ சாவு இல்லை. ஆனாலும் துன்பமுந் துயரமும் காட்டப்படும். முடிவில் எல்லாத் துன்பங்களும் தீர்ந்து, தலைவனும் தலைவியும் இன்பத்தையே அடைவார்கள். அரங்கில் காணப்படும் பகுதியில் இனிய சுவையும் பாவப் பொலிவும் வாய்ந்த இடங்களையே காட்ட வேண்டும். வெற்று நிகழ்ச்சிகளை இரு அங்கங்களுக்கு நடுவே வருவனவும் முக்கியமுமில்லாத பாத்திரங்களான சேடி முதலியோர் தோன்றும் பிரவேசகம் என்ற சிறு காட்சிகளில் பேச்சு மூலம் தெரிவிக்க வேண்டும்.

அரங்கில் உடை களைவது, படுப்பது, முத்தமிடுவது முதலியன கூடா நாடகம் இரு மொழிகளில் இருக்கும். உயர்நிலையிலுள்ள பாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் பேசுவர். மற்றவர் பொதுவாக வழங்கும் கொச்சையில் பேசுவர்; ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டு பதில் சொல்லுவர். பிராகிருதம் என்றது தனி மொழியாக இலக்கணத்துடன் கற்கப்பட்டு வந்த காலத்தில் இப்படி இரு மொழிகளையும் கலந்து நாடகத்தில் பேசியிருக்க முடியாது. பிராகிருதங்கள் சமஸ்கிருதத்தினின்று அதிகமாக விலகாத காலத்திலேயே சமஸ்கிருத நாடகம் ஏற்பட்டிருக்க வேண்டும்; இதுவும் அதன் பழமைக்கு முக்கியமான சான்றாகும். நாடகத்தில் அமைந்த இலக்கியம் செய்யுள், உரை என்ற இரு நடைகளிலும் இருக்கும். துவக்கத்தில் சூத்திரதாரன் வந்து நாடகத்தின் பெயரை யும், அதை எழுதியவர், நடிப்பவர் முதலியவர்களைப் பற்றியும் கூறுவான். பிரஸ்தாவனை என்ற இந்த முகவு