பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

செந்தமிழ் பெட்டகம்


விளக்கி ஜீவானந்தம் என்னும் நாடகத்தையும் எழுதினார்.

பிரகரணம் : சமஸ்கிருத நாடகவிலக்கியத்தில் பிரகரணத்தைப் பொதுமக்கள் கையாளும் சமூக நாடகம் எனக் கருதலாம். இது பத்து அங்கங்களில் அந்தணன், மந்திரி, வணிகன் முதலியோரின் வாழ்க்கை அமிசங்களைச் சித்திரித்துக் காட்டும்; இதில் குலமாது நாம்யாய் இருந்து முழுதும் நல்லொழுக்கத்தையே காட்டும் வகையும் உண்டு; விலைமாதை நாயிகையாய்க் கொண்ட காதல் கதையை அமைத்த பிரகரணங்களும் உண்டு; முதலில் சொன்ன வகை சுத்தம்; பின் சொன்னது சங்கீரணம், அதாவது கலப்பு.

இந்த சமூக நாடக வகை மிகப் பண்டைக் காலத்திலிருந்தே வரும் தொடர்ச்சியைக் கொண்டதெனப் பரதர் தம் நாட்டிய சாஸ்திரத்தில் இதை விரிவாயும் தெளிவாயும் வகுத்திருப்பதிலிருந்து தெரிகிறது. மேலும், இந்தப் பிரகரணம் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தி லேயே நன்கு கையாளப்பட்டிருந்த செய்தி அசுவ கோஷனது சாரீபுத்திரப் பிரகரணம்’ என்ற நாடகத்திலிருந்து விளங்கும்.

காளிதாசனுடைய சாகுந்தலத்தைப் போல் மிகவும் பல நாட்டாராலும் போற்றப்பட்டதற்கான 'மிருச்ச கடிகம்’ என்ற நாடகம் இந்தப் பிரகரணப் பிரிவைச் சேர்ந்ததே. இத்துறையிலே இதை விஞ்சிய நூல் கிடையாது. இதன் ஆசிரியன் சூத்திரகன். சூத்திரகன் என்பவன் பண்டை இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற அரசனாயிருந்து, அவனைப் பற்றிப் பல கதைகளும் எழுந்து, இன்று அவன் உண்மையில் எந்த நூற்றாண்டில் இருந்தான் என்று சொல்லவும் முடியாதவாறு கதைக் குவியல்களுக்குள் முழுகிப் போய் விட்டான். வரலாற்றாராய்ச்சியாளர் சிலர் அவனை ஆந்திரப் பருத்திய ராஜ வமிச ஸ்தாபகனாகக் கருதிக் கிறிஸ்துவிற்கு முன் கொண்டு போகிறார்கள் ; மேனாட்டு ஆராய்ச்சியாளர்