பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

131


கி.பி. யில் அவனை அமைக்கிறார்கள், எழுதியவன் காலம் எதுவாயிருந்தாலும், இதில் எழுதப்பட்ட கதை, வரலாற்றுத் தொடர்புடன் கூடியது. இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் உஜ்ஜயினியில் ஏற்பட்ட அரசியல் புரட்சியைக் காண்பிக்கின்றன.

இதன் கதாநாயகன் சாருதத்தன் உஜ்ஜயினிக்கே அணியான ரஸிகன், அருள் மிக்கவன் ; கொடுத்துக் கொடுத்து ஏழையாய்ப் போன வள்ளல். அவனுக்கும் நகருக்கே அழகாக இலங்கிய வசந்தசேனை என்ற வேசிக்கும் காதல் ஏற்பட்டது. நாயிகை சாதிக் குறையை விட்டுச் சீரிய அன்பும் உண்மைப் பற்றும் கொண்டு, அரசனுடைய சலுகையைப் பெற்ற நகராண்மைத் தலை வனும் அரசனுடைய காதலியொருத்தியின் உடன்பிறந்தவனும், அரசனுக்கு மைத்துனன் என்ற அதாகாரத்தில் எத்தீமையையும் விளைவிக்க வல்லவனும் ஆகிய சகாரன் என்றவனைப் புறக்கணிக்கிறாள். சகாரன் வசந்தசேனையின் மென்னியைத் திருகிவிட்டு, அவள் குற்றுயிராயிருக்கும் போதே ஏழை சாருதத்தன் அவளைப் பணத்திற்காகக் கொன்று விட்டான் என நியாய மன்றத்தில் வழக்குத் தொடுத்தான்.

ஏழைச் சாருதத்தன் கழுவேறும்படி தண்டிக்கப்பட, அப்போது திடீரெனத் தோன்றிய அரசியல் புரட்சி ஒன்றில் கொடுங்கோல் முறிந்து, சாருதத்தனின் நண்பர் மூலம் செங்கோல் ஏற்பட, சாருதத்தன் விடுபட்டான். இதில் பெரிதும் சிறிதுமாக,30 பாத்திரங்களை அமைத்து, நிகழ்ச்சியின் சுவையும் விருவிருப்பும் கெடாமற் கவிப் பொலிவையும் நிரப்பி அருளையும் நகையையும் சுவை படப் பொருத்தி, வாழ்க்கையின் கீழ்த்தரங்களிலிருந்து உயர்ந்த நிலைகள் வரைக்கும் நிகழ்ச்சிகளை அமைத்து, விதியின் வலியையும் குணத்தின் மேன்மையையும் விளக்கி நிகரற்ற நாடகமாகச் சூத்திரகன் எழுதியுள்ளான்.

சூத்திரகனுக்குப் பின்னால் அவனைப்போல உயர்வைக் காண முடியவில்லை யென்றாலும், பின்