பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

137


அமையவில்லை. ஆனாலும் இவற்றில் உலக வாழ்க்கையிலுள்ள போலிகள் நன்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. இவற்றுள் சிலவற்றின் பெயர்களை மட்டும் இங்குக் குறிக்கலாம்; 12 ஆம் நூற்றாண்டில் கான்யகுப்ஜத்தில் சங்கதரன் எழுதிய லடக-மேளகம் (போக்கிரிகளின் கூட்டம்), அதே நூற்றாண்டில் எழுந்த பிரகலாத தேவனின் ஹாஸ்ய சூடாமணி, 15 ஆம் நூற்றாண்டில் சோதிரீச்சுவரன் எழுதிய துர்த்தசமாகம் (காலிகளின் சேர்க்கை), சகதீர்சுவரனின் ஹாஸ்யார்ணவம் (நகைக்கடல்),கோபிநாதனின் கொளதுக ஸர்வஸ்வம், மாணிக்க தேவரின் கொதுக ரத்தினாகரம், 17 ஆம் நூற்றாண்டில் சாமராசர் எழுதிய தூர்த்த நர்த்தகம்.

பாணம் என்ற ரூபவகை ஒர் அங்கத்தையே கொண்டது. இதன் சிறப்பிலக்கணம் இதில் வரும் நடிகன் தான் காணும் பாத்திரங்கள், நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும பிறருடன் பேசுவது போல் தானே பேசிக் கொண்டு போவதாகும். “ஒகோ, இதேமா வருகிறான் இவனைக் கேட்கிறேன்; ஏன் என்ன சொன்னாய்? நாளை வருகிறேன் என்று சொன்னாயா? சரி, சரி” இப்படிப் பலருடைய குரல்களுடன் பலர் பேசுவது போல் முக்கியப் பாத்திரமாய்த் தோன்றும் நடிகன் ஒருவனே பேசிக் கதை முழுவதையும் நடத்துவான். பாணம் என்றால் பேசிக் கொண்டு போவது எனக் கருத்து ஏற்படும். இந்த முறைக்கு ஆகாச-பாஷிதம் (காற்றில் பேசுவது) என்று பெயர். இதில் சிறப்பான கதை ஒன்றுமிருக்காது. ஒரு நாளில் ஒர நகரில் ஒரு ரசிகனக்கு நிகழும் காதல் நிகழ்ச்சி,அதனிடையே அவனுக்கு நேரும் நண்பரின் சந்திப்பு முதலியவற்றைக் காண்பிக்கும். பிரகசனத்தில் எப்படியோ அப்படியே இதிலும் வாழ்க்கையில் காணப்படும் பல வகைப் போலிகளின் இயற்கைச் சித்திரங்கள் காணப்படும்.

மிகப் பழமை வாய்ந்த முதல் பாணங்கள் இப்போது அகப்படவில்லை. குப்த மன்னரின் காலத்தில்