பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

செந்தமிழ் பெட்டகம்


செய்யுளுக்கும் கவிதைக்கும் தொடர்புண்டு. எனினும், செய்யுளில் அமையாத கவிதையும், கவிதைப் பண்பற்ற செய்யுளும் உள்ளன. உணர்ச்சி வேகம், கற்பனைத் திறன், ஓசை நயம் இவை நிறைந்த இலக்கியத்தைக் கவிதை என்று சாதாரணமாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த இலக்கணங்கள் பொருளின் மேல் சுமத்தப்படும் அணிகளல்ல; பொருளோடு பிறந்து வளர்ந்து அதன் அமைப்பில் இன்றியமையாத இடம் பெற்றனவாம். பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பு வசனத்தை விடக் கவிதையில் மிகவும் உறுதியானது. கவிதையின் பொருள் நீரிலுள்ள மீனைப் போன்றது. அதைத் தனியே வெளியில் எடுத்தால் செத்து விடும். எதுகை, மோனை, சொல் நயம் முதலியவை பொருளையே மாற்றியமைக்கும் திறமை வாய்ந்தனவாம். அழகே தன் நோக்கமெனக் கொண்ட கவி, சொற் செல்வத்தைப் பெரிதாய்க் கருதுவது தவறாகாது. உள்ளுறையும் பொருளைவிட உருவமே-அதாவது அனுபவத்தை உணர்த்தும் முறையே-கவிதையின் அடிப் படையாகும். கவிதை நடை சாதாரணப் பேச்சினின்றும் எவ்விதம் மாறுபடுகிறது? கவிதை நடை காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தம் திறனுடையதாகவும், ஓசை நயமுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

கவிதையும் தமிழும் :

தமிழ் மொழியில் கவிதை முதன் முதலாக எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எந்த மொழியிலும் ஆதியில் இலக்கியம் என்ற வடிவிலே தோன்றுவத் கவிதைதான் என்பது மொழி ஆராய்ச்சியாளரின் முடிவு. தமிழ் மொழி மிகப் பழமையானது. எனவே இத்தொன்மையான மொழியில் ஆதியில் தோன்றிய இலக்கிய வடிவமான கவிதை மிக மிகப் பழமையானது என்பத தெளிவு.

மற்ற மொழிகளிற் போலவே தமிழிலும் கவிதை என்பது மக்களிடம் வழங்ககின பாமரப் பாடல்களின்