பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

157


இனமுண்டு. இநத இலக்கணம் பரப்பும் ஆழமும் கொண்ட கடல். ஆங்கில மக்கள் கவிதையியல் ரிதம் என்று குறிப்பிடுகின்ற ஒசைப் பண்பைப் போன்று தமிழர்கள் ‘பா’ எங்னற பண்பை ஆராய்ந்து இந்தக் கவியுருவங்களை வகுத்திருக்கிறார்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் “பாவென்பது சேட் புலத்திருந்த காலத்தும், ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்வதற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல் தோர் ஒசை” என்பர்.

இந்த ஓசையைச் செப்பல் ஒசையென்றும், அகவல் ஓசை யென்றும், துள்ளல் ஓசையென்றும், தூங்கல் ஓசையென்றும் நான்காகப் பிரித்தனர். வெண்பாவின் ஓசை செப்பல். ஆசிரியப்பாவின் ஓசை அகவர், வஞ்சிப்பாவின் ஓசை தூங்கல், கலிப்பாவின் ஓசை துள்ளல். இவற்றுள் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என மூவகைப்படும். அகவல் ஓசையும் தூங்கிசை அகவல், ஏந்திசை அகவல், ஒழுகிசை அகவல் என மூவகைப்படும். துள்ளல் ஓசையோ ஏந்திசைத் துள்ளலென்றும், அகவல் துள்ளலென்றும், பிரிந்திசைத் துள்ளலென்றும் மூவகைப்படும். துள்ளல் ஓசையோ ஏந்திசைத்துள் லென்றும், அகவல் துள்ளலென்றும், பிரிந்திசைத் துள்ளலென்றும் மூவகைப்படும். இந்த ஓசையின் தன்மைகளையெல்லாம் இலக்கண நூல்கள் அசை,சீர், தளை முதலிய செய்யுள் உறுப்புக்களின் இணைப்பு முறையை வைத்து வகைப்படுத்தி வரையறை செய்திருக்கின்றன.

கவிதையில் நிகழும் ஓசையை மற்றொரு வகையில் வண்ணம் என்பர். இதனைத் தொல்காப்பியர், கையனார் போன்ற ஆசிரியர்கள் பாவண்ணம், தாவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்பன போன்று இருபது வகைப்படுத்துவர். அவநயனர் தூங்கிசைவண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை