பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

செந்தமிழ் பெட்டகம்


வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என ஐந்து வகைப்படுத்தி, ஒவ்வொன்றிலும் இருபது உட்பிரிவு கொண்டு வண்ணம் நூறென்பர்.

கவிதையின் அழடிகை வனப்பென்பர். இது அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எட்டு வகைப்படும். பார்க்க : வனப்பு. கவிதையைப் பழைய யாப்பருங்கல விருத்தி உரைகாரர் அழகாகச் சுருக்கித் தெளிவோடு வரம்பு கட்டியிருக்கிறார். அது வருமாறு : சொல், பொருள், உணர்வு, வண்ணங்கள் தொடர்ந்து குற்றமின்றி, அவை தத்தமுள தவழும் கோள் உடையவாய் இன்பம் பெருக்கி, அம்மை முதலான வனப்பலங்காரமும், செம்மையும் செறிவும் பெறுவுழிப் பெற்று, இம்மை மறுமைக்க நன்மை பயந்து, எல்லார்க்கும் பலனுற நடைபெறுவது யாப்பு,பாட்டு, செய்யுள் என்று சொல்லப்படுவதாயிற்று.