பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

செந்தமிழ் பெட்டகம்


னவே, அலங்காரம் என்றால் அழகுபடுத்துவது என்பதே இவர்கள் கூறும் பொருள். தண்டியைப் பின்பற்றி வாமனர் என்ற அணியாசிரியர், “கவிதையின் ஆன்மா ரீதி, அதாவது நடை; இந்நடைக்கு அவசியமானவை சொல்லுக்கும் பொருளுக்குமாக ஏற்பட்ட குணங்கள் சிறந்த முறையில் அமைந்திருக்கும் நடை 'வைதருப்பம்’ என்னுறு தண்டியாலும் வாமனராலும் போற்றப் படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய ஆராய்ச்சியில், கவிதையின் வெளித்தோற்றம் ஆராயப்பட்டதே அல்லாது, குணத்திற்கும் உள்ளே சென்று, கவிதையின் உயிர் என்று சொல்லும் உள்தத்துவம் என்ன என்ற ஆராய்ச்சி நன்கு செய்யப்படவில்லை. ஆனால் சமஸ்கிருத இயலிசை நாடகங்களுக்கு முதலிலக்கண நூலாக எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் பரத மஹரிஷி இந்த உட் பொருள் சுவை (ரசம்) என்பதே என்று சொன்னார். ஆனால் இந்த ரசமும் அதனுள் அடங்கிய பாவங்களும் நாடகத்திற்கே முக்கியமாக உரித்தானவை. கவிதையிலோ இவை சொல் மூலமாகவே தரவேண்டியனவா யிருப்பதால் இவை அலங்காரமா மாறித்தான் கவிதையில் பயன்படுகின்றன என்று பழைய அணியாசிரியர்களான பாமஹரும் தடியும் கருதினர்.

பரதரை எவ்வவாறு மறந்தனரோ அவ்வாறே வால்மீகியையும் அவருடைய இராமாயண காப்பியம் தோன்றிய கதையையும் மறந்தனர். வேடன் அடித்துத் தள்ளிய பறவையைக் கண்டு துக்கத்தால் நிரம்பிய வால்மீகியின் இதயத்திலிருந்து அத்துயர உணர்ச்சியே சுலோகமாக வெளிவந்தது. சோகமே சுலோகம் ஆயிற்று’ என்று வால்மீகியே சொல்கிறார். ஆகையால் கவிதை எழுச்சிக்கு எதுவாயும், எழுந்த கவிதைக்கு உயிராயும் இருப்பது இந்தச் சுவையே. இந்த ரசமே கவிதையின் உட்பொருள், ஆன்மா. இவ்வுண்மையை மறுபடியும்