பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

167


நாயகரின் சிறப்பாலும், ஆகியவரின் சிறப்பாலும், அவற்றிற்கும் நாட்டுப் பண்பாட்டிற்குமுள்ள அடிப்படையான தொடர்பாலும் அவற்றை இதிகாசம் என்று சொல்லுவர்.

மேற்சொன்ன ரசம் முதலிய இலக்கணங்களே முக்கியம். மொழியோ வெளி உருவமோ எவ்விதமானாலும் அது கவிதை,காவியம் என்ற உண்மையை மாற்றாது. சமஸ்கிருத கவிதை ஆராய்ச்சியில் செய்யுள் வேறு, உரைநடை வேறு என்பதில்லை; அப்படியே சமஸ்கிருதம், பிராகிருதம், மற்ற மொழிகள் என்ற வேற்றுமையுமில்லை. கவிதைக்குரிய இலக்கணங்கள் அமைந்ததே கவிதை.