பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

185



வடிவில் எழுதுகிறார். நச்சினார்க்கினியரும் பல இடங்களில் இம்முறையில் எழுதுகிறார். பேராசிரியரும் தாம் எதையேனும் புதியதாகக் கூறும் பொழுதும், எதையேனும் ஆராய்ச்சி செய்யுமுன்னும்,அவற்றின் காரணங்களைக் கட்டுரை வடிவில் தருகிறார். திருக்குறளுக்கு உரையிட்ட பரிமேலழகர் நூல் முகத்தே உரைப்பாயிரம் என்ற தலைப்பிலும், காமத்துப்பாலின் தொடக்கத்திலும்.அழகிய கட்டுரைகள் வரைந்துள்ளார். எடுத்துக்காட்டு முதலியவற்றைச் சுருங்கிய முறையில் அளவுடன் எடுத்தாண்டு,மேனாட்டார் தற்காலத்தில் கட்டுரைக்குக் கூறும் இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றவை இவ்விரண்டு கட்டுரைகளும்.

இவற்றையடுத்துக் கட்டுரை என்று கூறத்தக்கவை தோன்றிய காலம் மேனாட்டிலிருந்து இவண் வந்து தமிழ் கற்ற வேற்றுச் சமயத்தவர் காலமேயாம். ராபர்ட் டீ நோபிலியும், பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் பல கட்டுரைகள் வரைந்துள்ளனர். ஏறத்தாழ இதே காலத்தில் தோன்றிய மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போத விரிவுரையில் பலவிடங்களிற் கட்டுரை வரைந்துள்ளார். இப்பெரியார் போன்றவர்கள் எழுதிய மறுப்பு நூல்கள் - எடுத்து என்னும் சொற்கு இட்ட வைரக் குப்பாயம் போன்றவை - முற்றிலும் கட்டுரை இலக்கணம் அமையப் பெற்றவை. அம்பலவாண தேசிகர் இயற்றிய பூப்பிள்ளை அட்டவணை போன்றவைகளும், பிள்ளைலோகாசாரியர், வேதாந்த தேசிகர் முதலானவர்கள் இயற்றிய 'இரகஸ்ய நூல்களும்' கட்டுரைகளே. அத்வைத வழியைப் பரப்பத் தோன்றிய நானாசீவவாதக் கட்டளை போன்ற கட்டளை நூல்களும் கட்டுரைகள் என்று கூறத்தக்கன.

அடுத்துக் கட்டுரை என்று முற்றிலும்கூறத்தக்க முறையில் பல பகுதிகளை எழுதியவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஆவர் இவர் காலத்தவராகிய இராமலிங்க வள்ளலார் சீவகாருணியம் போன்ற நல்ல