பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

செந்தமிழ் பெட்டகம்


உலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகத் தோற்றமளிக்கின்றன.

மான்டேன் எழுதிய கட்டுரைகள் 1603-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றன. ஆங்கில எழுத்தாளர்களும் மான்டேனைப் பின்பற்றி எழுதத் தொடங்கினர். அவர்களுள் நாடகக் கவிஞர் ஷேக்ஸ்பியரும் பேரறிஞர் பேக்கனும் குறிப்பிடத்தக்கவர்கள். இருவருமே மான்டேனுடைய இலக்கியத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்தவர்கள் என்றாலும், பேக்கன் ஒருவரே தாமும் மான்டேனாக விளங்க வேண்டுமெனப் பெரும் பாடுபட்டார். முயற்சி திருவினையாக்கிற்று. இன்று பேக்கன் ஆங்கில மான்டேன் எனப் புகழ்ப்படுவதோடு ஆங்கில இலக்கியத்தில் தனியிடம் பெற்று விளங்குகின்றார். அவருடைய கட்டுரைக் கோவைகள் 1597, 1612, 1625 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இவையே பின்வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் வழிகாட்டின. ஆகவே தான் பேக்கன் ஆங்கிலக் கட்டுரை இலக்கியத்திற்குத் தந்தையெனப் போற்றப்படுகின்றார். கட்டுரையென்பது சிதறிய சிந்தனை, ஆழ்ந்த எண்ணங்கள் ஆகியவற்றின் வடிவமே என்பது பேக்கன் கருத்து.

அதே காலத்தில் தாமஸ் ஓவர்பரி என்பவரால் கட்டுரை இலக்கியம் ஒருபடி முன்னேற்றம் அடைந்தது. இவர் மனிதன் இயல்பையும் பண்பையுமே விளக்கிக் கட்டுரைகள் எழுதி,அவற்றை ஒரு தொகுதியாக வெளியிட்டார். இவரைப் பின்பற்றி ஜான் ஏர்ள் என்பவர் கட்டுரைகள் எழுதினார். இவருடைய கட்டுரைகள் மிக நீளமானவை, கட்டுரையின் இலக்கணம் இவர் காலத்தில் வளர்ச்சியடைந்தது. கட்டுரையில் கருத்துத் தெளிவும் விளக்கமும் இடம் பெற்றன. இக்கட்டுரையமைப்பிற்கு எடுத்துக்காட்டாக 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ரிச்சர்டு பர்ட்டன், சர் தாமஸ் பிரெளன் முதலியவர்களுடைய கட்டுரைகளைக் கூறலாம். இக்கட்டுரைகளைப் பின்பற்றி 1668-ல் ஜான் டிரைடனின்