பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

199


மலையாளத்தில் 1899ஆம் ஆண்டில் பைலோ பால் என்பவர் புராண கதா நிகண்டு என்ற பெயரால் வெளியிட்டார். மலையாள இலக்கியம், வழக்கங்கள், கதைகள் முதலியவற்றையும் சேர்த்து, சாகித்திய நிகண்டு என்ற பெயரால் இது 1927-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் 1902ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், நாவல் கோட்டம் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை புராணம், இதிகாசம், இலக்கியம் முதலியவற்றிலிருந்து பொருள்களைத் திரட்டியெடுத்து, அகரவரிசைப்படுத்தி, அபிதான கோசம் என்ற நூலை வெளியிட்டனர்.

1908-ல் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரித் தமிழாசிரியர் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தமிழ் நூல்களிலும் சமஸ்கிருத நூல்களிலுமுள்ள சிறப்புப் பெயர்களுக்கு விளக்கம் கூறிச் சிறப்புப் பெயரகாதி என்ற நூலை வெளியிட்டார். அதில் முன்கூறிய இலக்கியப் பொருள்களுடன் வேறு பல பொருள்களும் காணப்படு கின்றன.

1938ஆம் ஆண்டில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவம், தாவரவியல், ரசாயனம் ஆகிய துறைகளிலுள்ள பொருள்கள் பற்றி ஒரு களஞ்சியம் 4 தொகுதிகளாக வெளியிட முயன்றார். இரண்டு தொகுதிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ~

அபிதான சிந்தாமணி போன்ற ஒன்று தெலுங்கில் 1952-ல் வேமுரி சீனிவாச ராவ் என்பவரால் பூர்வ கதாலகரி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

ஆனால் மேற்கூறிய நூல்கள் எல்லாம் இக்காலத்துக் கலைக்களஞ்சியங்கள் போல் அறிவுத்துறைகள் அனைத்திலுமுள்ள சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும் விளக்குவனவாக இல்லை.

இவ்விதமான கலைக்களஞ்சியம் ஒன்றைத் தெலுங்கில் கே.வீ. லட்சுமண ராவ் என்பவர் 1913ஆம் ஆண்டில் தொடங்கி ஆந்திர விஞ்ஞான சர்வஸ்வமு