பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடந்தை நகர்


கலைஞர் கோ



டாக்டர் உ.வே. சா

சங்க நூல்களையும் பழைய காவியங்களையும் முதன்முதலில் நல்ல முறையில் அச்சிட்டுத் தமிழில் ஒரு புதிய மலர்ச்சியை உண்டாக்கியவர். இவர் தஞ்சை மாவட்டத்தில் உத்தமதானபுரம் என்ற சிற்றுாரில் சங்கீத வித்துவானாகிய வெங்கடசுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் புதல்வராக 19-2-1855-ல் பிறந்தார். தம் தந்தையாரிடத்திலும் அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடத்திலும் இளமையில் கல்வி கற்றார். சங்கீதம் பயிற்ற வேண்டுமென்று இவர் தந்தையாருக்கு விருப்பம் இருந்தாலும், இவருக்குத் தமிழில் இருந்த பேரார்வத் தையறிந்து, தமிழ்ப்புலவர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று, தங்கி, இவர் கல்வி கற்கும் வசதியைச் செய்து வந்தனர்.

1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணாக்கராகச் சேர்ந்தார். அவர் திருவாடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்து, பல மாணாக்கர்களுக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லிக் கொண்டு வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இறுதிக்காலம் வரையில் (1-2-1876) சாமிநாதையர் அவருடைய மாணாக்கராக இருந்து பாடம் கேட்டார். அப்புலவர் அவ்வப்போது