பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

செந்தமிழ் பெட்டகம்


1917ஆம் ஆண்டில் பாரத தர்ம மண்டலத்தார், ‘திராவிட வித்தியாபூஷணம் என்ற பட்டத்தையும் 1925ஆம் ஆண்டில் காமகோடி பீடாதிபதியாகிய ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள், ‘தாக்ஷிணாத்ய கலாநிதி' என்ற பட்டத்தையும் வழங்கினார்கள். சென்னைப் பல்கலைக்கழகம், ‘டாக்டர்’ என்ற பட்டத்தை 1932-ல் வழங்கியது. சென்னை, ஆந்திரம், மைசூர், காசி முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பலவகையில் கலந்து தொண்டாற்றினார்.

1936ஆம் ஆண்டு மார்ச்சு 6ஆம் தேதி இவருக்கு 80 ஆண்டுகள் நிறைந்தபோது இவருடைய சதாபிஷேக விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது.