பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

செந்தமிழ் பெட்டகம்


திருத்த முடியாது என்று அறிந்த கும்பகர்ணன் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் முறையில் போர்க்களம் சென்று ஆவி துறந்தான்.

இராவணன் செய்கை முறையன்று என்று விபீஷண்னும் தெளிவாக எடுத்துரைத்தான். சிறையிருந்த சீதையின் கற்புத்தீயால் இலங்கை அழிந்தது. என்று பணிவுடன் பேசினான். மாறுபட்ட தம்பியின் கருத்தை அறிந்த இராவணன் பெருஞ்சீற்றங் கொண்டு அவனை நாட்டினின்று வெளியேற்றினான். எனவே, மன்னன் கருத்திற்கு மாறாகப் பேசும் உரிமை, வல்லரசாட்சியில் எவர்க்கும் இல்லை என்பது நன்கு விளங்குகின்றது.

இன்னும் நாட்டில் வாழும் குடிகளும் அரசாங்க நிகழ்ச்சிகளைப் பற்றித் தங்கு தடையின்றித் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை நல்லரசாட்சியில் உண்டு. வல்லரசாட்சியில் மக்கள் “இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்." இவ்வுண் மையைக் கம்பராமாயணம் நன்கு விளக்குகின்றது.

விசுவாமித்திர முனிவரோடு சென்ற இராமனும் இலக்குவனும் மிதிலை மாநகரத்தில் மன்னன் மாளிகையிலே தங்கினார்கள். அரசிளங் குமரரின் இளமையும் அழகும் மிதிலை மன்னன் மனத்தைக் கவர்ந்தன. அவர்கள் தசரதன் மக்கள் என்று முனிவர் வாயிலாக அறிந்தபோது சீதையின் திருமணத்திலே சிந்தையைச் செலுத்தினான் மன்னன். அதற்காக நியமித்திருந்த நெடிய வில்லை எடுத்து வரப் பணித்தான். அப்போது மிதிலை மக்கள் அரண்மனையில் வந்து குழுமினார்கள், சீதைக்குப் பொருத்தமான நாயகன் இராமனே என்று எல்லோரும் கருதினார்.

நலமெலாம் ஒருங்கே வாய்ந்த இருவருக்கும் மணஞ் செய்து மகிழாமல் வில்லை வளைத்த வீரனுக்கே மங்கை யைக் கொடுப்பதாக மன்னன் முடிவு செய்துள்ளானே என்பதை எண்ணி மனம் வருந்தினார். மிதிலை அரசன்